டெல்லி: நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டின் போது விலை மாற்றத்துக்கு உள்ளான அத்தியாவசியமான மருந்துகளை ரீ-பேக்கேஜிங் செய்து அனுப்புவதற்கு அளிக்கப்பட்ட உள்நாட்டு பொருள் வரி விலக்கை மேலும் 30 நாட்கள் வரை அரசு நீட்டித்துள்ளது.
நேஷனல் ஃபார்மாஸூட்டிகல் ப்ரைஸிங் அத்தாரிட்டி (என்பிபிஏ) புதிய மருந்து விலை கட்டுப்பாட்டு உத்தரவை (டிபிஸிஓ) செயல்படுத்திய பின், மே மற்றும் ஜூன் மாதங்களின் போது விலை நிர்ணயம் செய்யப்பட்ட இந்த குறிப்பிட்ட மருந்துகளின் முதல் பாட்சுக்கு மட்டுமே வரி விலக்கு அளிப்பதாக ஜூலை மாதத்தின் போது நிதி அமைச்சகம் அறிவித்தது, இதன் படி, ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த அனைத்து மருந்துகளின் சராசரி விலை, குறைந்தபட்சம் ஒரு சதவீதம் வரையிலான சந்தைப் பங்குடன் இருக்கும்படியாக விலை வரையறை நிர்ணயிக்கப்பட்டது.

சுமார் 348 அத்தியாவசிய மருந்துகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு, இப்புதிய விலை உத்தரவின் படி இணங்குவதற்கு சுமார் 45 நாட்கள் வரையிலான காலக்கெடுவை மத்திய அரசு அளித்தது. ஆனால், இந்நிறுவனங்கள் சந்தையில் உபயோகத்தில் உள்ள அம்மருந்துகளை திரும்பப் பெற்று, அவற்றை ரீ-பேக்கேஜ் மற்றும் ரீ-லேபிள் செய்து திரும்ப அனுப்பி வைக்க வேண்டி இருந்ததினால், விலை நிர்ணயம் செய்யப்பட்ட முதல் தொகுதியில் இருந்த மருந்துகளுக்கு உள்ளூர் பொருள் வரிக்கு விலக்கு அளித்தது அரசு.
"பொதுமக்களுக்கு நலம் பயக்க இந்த நீட்டிப்பு மிகவும் அத்தியாவசியமானது என்ற வாதத்தை ஆமோதித்து, ஃபார்மாஸூட்டிகல்ஸ் டிபார்ட்மென்ட் (டிஓபி), என்பிபிஏவினால் வெளியிடப்பட்ட விலை அறிவிப்புகள் தொடர்பாக வரி விலக்கு செல்லுபடியாகக்கூடிய காலக்கெடுவை, ரெவின்யூ டிபார்ட்மென்ட்டின் ஒப்புதலோடு, முன் அறிவித்த 45 நாட்கள் கெடு முடிவடைந்த அடுத்து மேலும் 30 நாட்களுக்கு நீட்டித்துள்ளது," என்று சமீபத்திய டிஓபி அறிக்கை ஒன்று கூறுகிறது.
மே 15 ஆம் தேதியில் விலைகள் மாற்றம் செய்யப்பட்டு, ரீ-ப்ரிண்டிங், ரீ-லேபிளிங், ரீ-பேக்கிங் அல்லது ஸ்டிக்கரிங் போன்றவற்றுக்கு உட்படுத்தப்பட்ட மருந்துகளின் உற்பத்தியாளர்களுக்கு, 30 நாட்கள் வரையிலான கூடுதல் காலக்கெடு வழங்கப்படுவதாக, ஜூலை 29 ஆம் தேதியன்று ரெவின்யூ டிபார்ட்மென்ட் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
புதிய விலைகளோடு ஒத்துப் போவதற்கு நிறுவனங்கள் கூடுதல் கெடுவை கேட்டு வற்புறுத்திக் கொண்டும், மருந்து உற்பத்தியாளர்கள் சிலர் பல்வேறு உயர்நீதி மன்றங்களை அணுகிக் கொண்டும் இருக்கும் சூழலில், இந்த புதிய நடவடிக்கை மருந்து உற்பத்தியாளர்களின் வயிற்றில் பாலை வார்த்திருக்கிறது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications