250 அதிநவின வங்கி கிளைகள் திறக்க திட்டம்!!! ஆந்திரா வங்கி...

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹைதராபாத்: ஆந்திரா வங்கி வெற்றிகரமாக செயல்பட்டு தற்போது 90 வருடங்களை நிறைவு செய்துள்ளதை குறிக்கும் விதமாக, கடந்த புதன்கிழமையன்று பல்வேறு மாநிலங்களில் சுமார் 90 அதிநவின (ஜென்நெக்ஸ்ட்) கிளைகளை திறந்துள்ளது.

இந்த கிளைகள் அனைத்தும், முழுமையாக தானியங்கி சாதனங்களை ஃப்ரன்ட் டெஸ்கில் கொண்டு, வாடிக்கையாளரின் பிசினஸ் ட்ரான்ஸாக்ஷன்களை 24 மணி நேரமும் செயல்படுத்தக்கூடிய வசதியைக் கொண்டிருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன. ட்ரான்ஸாக்ஷன்களை விரைவாக செயல்படுத்துவதற்கு வசதியாக, வாடிக்கையாளர்களின் பல்வேறு தேவைகளையும் நிறைவேற்றும் வண்ணம் ஊழியர்களுக்கான பணிகள் கவனமாக வரையறுக்கப்பட்டுள்ளன.

250 அதிநவின வங்கி கிளைகள் திறக்க திட்டம்!!! ஆந்திரா வங்கி...

இந்த கிளைகளை அதிகாரப்பூர்வமாக இ-லான்ச் செய்த பின் பேசிய நிர்வாக இயக்குனர் கே.கே.மிஸ்ரா, இவ்வங்கி அதன் 91-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இத்தருணத்தில், கூட்டுமுயற்சியின் மூலமே இந்த 90 கிளைகளையும் நெக்ஸ்ட் ஜெனரேஷன் கிளைகளாக மாற்றுவது சாத்தியமாகியுள்ளது என்று கூறியுள்ளார்.

பின்னர், பத்திரிக்கையாளர்களிடம் பேசிய நிர்வாக இயக்குனர் எஸ்.கே.கர்லா, இந்த வருடம் ஏப்ரல் மாதத்தின் போது, ஹைதராபாத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு பைலட் நெக்ஸ்ட் ஜெனரேஷன் கிளைககளிலும் வங்கிக்கு ஏற்பட்ட அனுபவம் ஊக்கமளிப்பதாக உள்ளது என்று கூறியுள்ளார்.

"இந்த வணிகவியல் மாற்றத்தை ‘நவ சக்தி' என்ற பெயரில் நாங்கள் விரிவுபடுத்த விரும்புகிறோம். இதன் மூலம் இந்த நடப்பு ஆண்டின் இறுதிக்குள், ஏற்கெனவே இருக்கும் கிளைகளை மாற்றியோ அல்லது புதிய கிளைகளை திறந்து வைத்தோ, சுமார் 250 நெக்ஸ்ட் ஜெனரேஷன் கிளைகளை துவக்க திட்டமிட்டுள்ளோம்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Andhra Bank opens 90 GenNext branches

To mark the completion of 90 years of operations, Andhra Bank on Wednesday opened 90 next generation branches across states.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X