டெல்லி: அந்நிய நேரடி முதலீட்டு (FDI) விதிகள் தளர்த்தப்பட்டதால் சீனா மற்றும் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளிவிட்டு முதலீட்டிற்கு உகந்த இடமாக இந்தியா உருவெடுத்துள்ளது என ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.
முன்னணி ஆலோசகர்களான EY (எர்னஸ்ட் & எங்) நிறுவனம் நடத்திய உலகளாவிய கணக்கெடுப்பில் முதலீட்டிற்கு உகந்த இடமாக இந்தியாவிற்கு உருவெடுத்துள்ளது, அந்நிய செலாவணிக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்ததை அடுத்து அது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய உகந்த இடமாக இந்தியா மாறியுள்ளதாக EY தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் அரசு பல்பொருள் சில்லறை வர்த்தகம் மற்றும் தொலைத்தொடர்பு உள்ளிட்ட பெரும்பாலான துறைகளில் அந்நிய நேரடி முதலீடு விதிகளை தளர்த்தி அறிவித்தது. மேல்நிலை பொருளாதார உந்துதல்கள் மற்றும் பெரும் கடன் சுமைகளினால் பெரும்பாலான இந்திய நிறுவனங்கள் முக்கியமற்ற தொழில்களில் முதலீட்டை திரும்பப்பெற விழைவதாக உலகளாவிய ஆலோசனை நிறுவனமான EY தெரிவித்துள்ளது.
இந்நிலை, இந்திய சந்தையில் பெரிய பங்கை ஆற்ற விரும்பிய அந்நிய முதலீட்டாளர்களுக்கு ஒரு பெரிய வாய்ப்பாக அமைந்துள்ளது, முதலீட்டில் அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் நாடுகள் முதல் மூன்று இடத்தை பிடித்துள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.
இக்கண்டுபிடிப்புகள், எழுபது நாடுகளை சேர்ந்த நிறுவனங்களிலிருந்து சுமார் 1600 மூத்த அதிகாரிகளிடையே EY நடத்தப்பட்டது. மேலும் இந்தியாவை பொறுத்தவரை, அதிக முதலீடுகளை எதிர்பார்க்கப்படும் துறைகளாக மோட்டார் வாகனம், தொழில்நுட்பம், வாழ்வியல் மற்றும் நுகர்வுப்பொருட்கள் துறைகள் இருக்கும்.
சரி EY (எர்னஸ்ட் & எங்) நிறுவனம் நடத்திய உலகளாவிய கணக்கெடுப்பில் முதலீட்டிற்கு உகந்த இடமாக உருவெடுத்துள்ள டாப் 10 நாடுகளை இப்பொழுது பார்ப்போம்.
இந்தியா
நடப்பு நிதியான்டின் ஜனவரி - ஜுன் மாத காலங்களில் மட்டும் சுமார் 10.87 பில்லியன் டாலர் வரை அந்நிய முதலீடாக இந்தியா பெற்றது.
பிரேசில்
காலபந்து விளையாட்டுற்கு மிகவும் பிரபலாமான பிரேசில் நாட்டில் அக்டோபர் மாதம் மட்டும் சுமார் 5361.55 மில்லியன் டாலர் வரை முதலீடு செய்யப்பட்டது.
சீனா
நடப்பு நிதியான்டில் அக்டோபர் மாதத்தில் மட்டும் சுமார் 97000 மில்லியன் டாலர் வரை முதலீடு செய்யப்பட்டது. அனால் சீனா பிடித்திருப்பது முன்றாம் இடம்.
கனடா
இப்பட்டியலில் கனடா பிடித்திருப்பது நான்காம் இடம்.
அமெரிக்கா
உலகின் வல்லரசு நாடான அமெரிக்கவின் விர்த்தக நிலையின் நிலையற்ற தன்மையை கண்டு பெரும் அளவு முதலீட்டை விலக்கியுள்ளனர். இதனால் இப்பொழுது முதலீட்டாளர்களிடத்தில் அமெரிக்காவின் உயர்ந்த நிலையை இலந்துள்ளது.
தென் ஆப்ரிக்கா
இப்பட்டியலில் தென் ஆப்ரிக்கா 6ஆம் இடத்தை பிடித்துள்ளது. தென் ஆப்ரிக்காவை தொடர்ந்து வியெட்னாம், மியான்மார், மெக்சிகோ, இந்தோனேசியா அகிய நாடுகள் டாப் 10 இடங்களை பிடித்துள்ளது.


Click it and Unblock the Notifications