மும்பை: டாடா சன்ஸ் குழுமம் புதிய வங்கி துவங்க அளித்திருந்த வங்கிகள் உரிம விண்ணப்பங்களை திரும்பப் பெற்றதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆர்பிஐ டாடா சன்ஸ் நிறுவனம் கேட்டபோது "தற்போதைய நிதி சேவை செயல் திட்டங்கள் குழுமத்தின் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வர்த்தக உக்திகளை சரிகட்டும் விதமாக உள்ளதாகவும் மேலும் முதலீட்டாளர்களை பாதுகாப்பதோடு, தேவையான அளவு நிர்வாக வசதியுடன் இருக்கிறோம்" டாடா சன்ஸ் குழுமம் ஆர்பிஐ-யிடம் கூறியதாக தெரிவித்துள்ளது.
இந்த வருடம் டாடா, ஆதித்ய பிர்லா நுவோ, ரிலையன்ஸ் கேப்பிடல், எல்&டி பைனான்ஸ் ஹோல்டிங்க்ஸ் உள்ளிட்ட 26 நிறுவனங்கள் வங்கித் துவங்க விண்ணப்பித்துள்ளன. உரிமங்கள் ஜனவரி மாதம் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னாள் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பிமல் ஜலன் தலைமையிலான குழுவிடம் இந்த விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தனியார் துறையில் புதிய வங்கிகளுக்கான விதிமுறைகளை கடந்த பிப்ரவரி 22ஆம் தேதி அறிவித்த ரிசர்வ் வங்கி, அதற்கான விளக்கங்களை கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்தில் கொடுத்திருந்தது.
கடந்த 20 வருடங்களில் ரிசர்வ் வங்கி 12 தனியார் வங்கிகளுக்கு உரிமங்களை இரண்டு பகுதிகளாக வழங்கியது. கடைசியாக 10 வங்கிகள், 1993 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்ட விதிமுறைகளின் கீழ் உரிமங்களை பெற்றன.


Click it and Unblock the Notifications