டெல்லி: நாட்டின் மிகப்பெரும் மென்பொருள் சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) ஹங்கேரி நாட்டின் மத்திய பங்குச்சந்தை அமைப்பான கெலர் நிறுவனத்திடம் இருந்து வங்கி மென்பொருள் பணி ஒப்பந்தத்தை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதன் மூலம் தன் TCS BaNCS என்றழைக்கப்படும், பங்குச்சந்தைக்கான கணினி கட்டமைப்பு மென்பொருள் தீர்வு வழிமுறைகளை மேம்படுத்தி பண மற்றும் பங்கு பரிமாற்றங்களை மையப்படுத்த உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

TCS BaNCS மென்பொருள் தீர்வு மூலம், ஒரு நவீனமுறையில் வரையறுக்கப்பட்ட தரத்துடனான, பன் மதிப்பு மற்றும் பன் நிறுவன கையாளும் வழிமுறைகள் கெலர் நிறுவனத்திற்கு கிடைப்பதுடன் புதிய சேவை திட்டங்களை அறிமுகப்படுத்த இத்திட்டம் உதவும் என்று டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பிய சந்தையில் தங்கள் நிறுவனத்தின் பாதையை வித்தியாசமாகவும், கம்பீரமாகவும் வகுக்க உதவும், தங்கள் திறமைகளையும் சேவைகளையும் விரிவாக்கவும், T2S பணிகளை நேரத்தில் முடிக்கவும் இயலும் என கெலர் நிறுவனத் தலைவர் க்யோர்கி டுதாஸ் தெரிவித்தார்.
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் உபதலைவர் விவேகனந்த் கூறுகையில் ஹங்கேரி எங்களுடைய ஒரு முக்கிய சந்தை என்றார். மேலும், " நாங்கள் எங்களுடைய சந்தை கட்டமைப்புகளையும் T2S திறமைகளையும் வெளிக்காட்ட ஆர்வமுடன் இருப்பதாகவும் ஐரோப்பிய முதலீட்டு சந்தைகளில் எங்கள் பாதையை விரிவுபடுத்த விரும்புவதாகிறோம்" என்று அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications