20:4:10 விதி என்றால் என்ன??? வாங்களேன் தெரிந்து கொள்வோம்....

கார், பைக் வாங்குவதற்கு முழுமையாக பணம் செலுத்தி வாங்கும் காலம் மலை ஏறி போய்விட்டது. இப்பொழுது சிறிய கார் ஆனாலும் சரி, சொகுசு கார் ஆனாலும் சரி கார் கடன் மூலமே வாகனத்தை வாங்குகிறார்கள் மக்கள்.

அத்தகைய கார் கடன் பெரும் தகுதி உங்களுக்கு உள்ளதா என்று அறிய வேண்டுமா, அதாவது உங்கள் மாத சம்பளத்தில் தவறாமல் செலுத்தக்கூடிய தொகையைப் பற்றி அறிய ஒரு வழி உள்ளது. அதற்கு நீங்கள் 20:4:10 என்ற விதியை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் கடன் பெரும் நிதி நிறுவனங்கள் உங்கள் வருமான வரி மற்றும் இதர சொத்துக்களை மதிப்பீடு செய்து உங்கள் தகுதியை நிர்ணயம் செய்திருந்தாலும், உங்கள் தரப்பில் இதனை கணக்கீடு செய்வதற்கு நிபுணர்கள் இந்த விதியை கொண்டுவந்துள்ளனர்.

இந்த 20:4:10 விதியை கொண்டு உங்கள் கார் கடன் தகுதியை கண்டறிவது எப்படி?

எல்லோராலும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த 20:4:10 விதி உங்கள் கார் கடன் தகுதியை தீர்மானிக்க பயன்படுத்தப்படுகின்றது. இதனை எப்படி விவரிப்பது எவ்வாறு பயன்படுத்துவது என்பதை இப்பொழுது பார்க்கலாம்.

இந்த விதியில் உள்ள ஒவ்வொரு இலக்கங்களிலும் அதன் முக்கியத்துவம் நிறைந்துள்ளது.

20% தொகை

20% தொகை

இந்த முதல் இலக்கங்கள் உங்கள் கடன் தொகையில் 20 சதவிகித அளவு தொகையை முதல் பணமாக செலுத்த வேண்டும் என்பதை குறிக்கின்றது. இதன் மூலமாக அதிக கடன் திரும்பி செலுத்துவதில் இருந்து நீங்கள் விடுபடலாம். மேலும், இத்தகைய அளவு தொகையை முதலில் செலுத்துவதால் மொத்த கடன் அளவில் சிறிது குறையும் வாய்ப்பு உள்ளது.

4 வருட காலம்

4 வருட காலம்

இது உங்கள் கார் கடன் காலத்தை குறிக்கின்றது. நான்கு வருடங்களுக்குள் உங்கள் கார் கடனை செலுத்திவிட்டால் அது உங்களுக்கு சிறந்தாக இருக்கும். எனினும், கார் கடன் வாங்குவோரின் சரிவை தவிர்த்து இலாபகரமான ஒப்பந்தத்தை பெறுவதற்காக பல வங்கிகள் இந்த கடன் காலத்தை 7 ஆண்டுகள் வரை நீட்டித்து உள்ளது. ஆனால், இந்த கால அவகாச நீட்டிப்பு அதிக கடன் வாங்குவோருக்கு மட்டுமே பொருந்தும்.

வருமானத்தில் 10% தவனை

வருமானத்தில் 10% தவனை

உங்கள் மொத்த சம்பளத்தில் 10 சதவிகித அளவு தொகையை நீங்கள் உங்கள் கார் கடனுக்கு ஈஎம்ஐ-யாக செலுத்தலாம். இந்த சதவிகித அளவு இதை விட குறைவாக இருப்பது உங்களுக்கு நல்லது. ஏனென்னில், இந்த சதவிகித அளவு அதிகரித்தால் அந்த தொகையை செலுத்துவதற்கு கடினமாக இருக்கும்.

நன்மை அளிக்கும் 20:4:10 விதி

நன்மை அளிக்கும் 20:4:10 விதி

நீங்கள் கார் கடன் பெற எண்ணினால், இந்த பொன்னான விதியை பயன்படுத்தி உங்கள் கார் கடன் தகுதியை தீர்மானிக்கலாம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+