வாடிக்கையாளரை ஏமாற்றிய இந்துஸ்தான் லீவர் நிறுவனத்திற்கு ரூ.5.5 லட்சம் அபராதம்!!!

டெல்லி: இந்துஸ்தான் லீவர் நிறுவனம் ரூ.5 இலட்சம் பணத்தை பரிசாக அளிப்பதாக தன்னுடைய டிடர்ஜன்ட் ஒன்றிக்கு அறிவித்திருந்தது. இதனிடையில் பரிசு பெற்றவருக்கு இந்துஸ்தான் லீவர் நிறுவனம் பரிசுப் பணத்தை கொடுக்காததால், அவர் நுகர்வோர் நிதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கை விசாரித்த நிதிபதி வழக்கு தொடுத்தவருக்கு ரூ.5.5 இலட்சத்தை கொடுக்க வேண்டும் என இந்துஸ்தான் லீவர் நிறுவனத்திற்கு எதிராக தீர்ப்பு வழங்கினார்.

இந்த திட்டம் லாட்டரி போல் தவறான வகையில் விற்பனையை அதிகரிக்கும் முயற்சி என்றும் 'இது போன்ற திட்டங்களை நுகர்வோர் அமைச்சகம் கட்டுப்படுத்தவும் மற்றும் துவங்குவதற்கு முன்னர் சோதனை செய்யவும் இது தான் சரியான நேரம் என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும், இவ்வாறாக பெருவாரியான மக்களை ஏமாற்றுவதை தடுப்பதற்கான கட்டுப்பாட்டு அமைப்பை ஏற்படுத்தவும் வேண்டும்' என்று புது டெல்லி நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

'நுகர்வோர் குறை தீர்க்கும் அமைப்பு என்பது சமமான வேலை கிடையாது. அதனால் தடுக்கவும் முடியாது. அதனால் இழப்பீட்டை கொடுக்கவும் அல்லது அந்நிகழ்விற்குப் பின்னர் நேரடியாக அந்த பரிசை நிறுத்தவும் மட்டுமே முடியும்' என்று குறிப்பிட்ட C.K.சதுர்வேதி தலைமையிலான பெஞ்ச், இந்த விஷயங்களை கவனிக்குமாறு நுகர்வோர் அமைச்சகத்தை கேட்டுக் கொண்டுள்ளது.

வாடிக்கையாளரை ஏமாற்றிய இந்துஸ்தான் லீவர் நிறுவனத்திற்கு ரூ.5.5 லட்சம் அபராதம்!!!

அந்நிறுவன விளம்பரத்தின் படி சர்ஃப் எக்ஸல் பாக்கெட்டில் ‘10/10' என்று குறியிட்ட துணியை யாருக்கு கிடைக்கிறதோ அவருக்கு ரூ.5 இலட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அதே போல ‘10/10' என்று குறியிட்ட துணியை பெற்று, கம்பெனியில் தகவல் அளித்த பின்னரும், தனக்கு பரிசு தரப்படவில்லை என்று டெல்லியைச் சேர்ந்த நாது சிங் ராஜ்புத் என்பவர் புகார் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்துஸ்தான் லீவர் நிறுவனமோ ‘10/10' என்ற குறியீடு மட்டுமல்லாமல், ஒரு தனிப்பட்ட ரகசிய எண்ணும் கொண்டிருக்கும் நபர்களுக்கு தான் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

இது போன்ற குறியீட்டைக் கொண்ட 4 துணிகள் மட்டுமே வெளியே அனுப்பப்பட்டுள்ளன என்றும், ஆனால் ‘10/10' குறியீட்டை மற்றும் வைத்துக் கொண்டு, தனிப்பட்ட ரகசிய எண் இல்லாமல் நுகர்வோர் அமைப்புகளில் புகார்கள் செல்வதாக இந்துஸ்தான் லீவர் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இந்துஸ்தான் லீவர் நிறுவனம் புகாரை மறுக்கவில்லை, ஆனால் வாங்கியவரின் புகாரின் உண்மைத் தன்மையுடன் தான் முரண்படுகிறது என்பதை நுகர்வோர் அமைப்பினர் கவனிக்கத் தவறவிட்டது என கூறிகிறோம்.

'எதிர்க்கட்சிக்காரர் (இந்துஸ்தான் நிறுவனம்) மிகவும் சாமர்த்தியமாக வழக்கை வடிவமைத்திருக்கிறார்கள் அல்லது ரகசிய உலக வார்தைகள், பரிசோதனைகளை நம்பச் செய்திருக்கிறார்கள்' என்று கூறி இந்துஸ்தான் நிறுவனத்தின் வாதத்தை தள்ளுபடி செய்தது.

இலட்சக்கணக்கான சர்ஃப் எக்ஸல் பாக்கெட்டுகளில் 4 பாக்கெட்டுகள் மட்டும் தான் பரிசுக்கு தகுதியானதாக இருக்கும் போது, ஏன் மேலும் பல பாக்கெட்டுகளில் ‘10/10' குறியீட்டை போட்டிருக்கிறார்கள் என்று அந்த அமைப்பு கேள்வியும் எழுப்பியது.

'லாட்டரி வழியாக வியாபாரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் எதிர்க்கட்சியினர் மோசடியான வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டது, எந்த வகையிலும் நியாயம் இல்லை' என்று குறிப்பிட்டு, இது போன்ற செயல்கள் பிற்காலங்களிலும் செய்யக் கூடாது என்று நிதிபதி வலியுறுத்தியது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+