பெங்களூரு: நாட்டின் மூன்றாவது பெரிய மென்பொருள் மற்றும் கணினி தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோ ரூ.17 கோடி சொத்து வரி நிலுவையால் பெங்களூரு நகராட்சி அதிகாரிகளின் சட்ட பூர்வ நடவடிக்கை அச்சுறுத்தல்களுக்கு ஆளாகியுள்ளது.
இந்த சூழ்நிலையில், பெங்களூரு நகராட்சி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால் எதிர்கொள்ளத் தேவையான அனைத்து சட்டபூர்வ வழிகளையும் ஆராய்ந்து கொண்டிருப்பதாக விப்ரோ தெரிவித்துள்ளது.
பெங்களூரு மாநகர நிர்வாகம், பல முறை கோரியும் விப்ரோ நிறுவனம் வரிகளை செலுத்தவில்லை எனவும், தற்போது அதனால் வரி செலுத்த இறுதி எச்சரிக்கை கொடுத்துள்ளதாகவும் தெரிகிறது. அவ்வாறு செலுத்தத்தவறினால் சொத்துக்களை பறிமுதல் செய்தல் உள்ளிட்ட சட்டபூர்வ நடவடிக்கைகளில் விப்ரோ சிக்க நேரிடும்.

"அந்நிறுவனம் ரூபாய் ரூ.16.47 கோடி வரி மற்றும் நிலுவைத் தொகைகளை வைத்துக்கொண்டு, பலமுறை கேட்கப்பட்ட பிறகும் செலுத்தாமல் உள்ளது. அவர்களுக்கு, மூன்றாவது மற்றும் இறுதித் அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது, ஆனாலும் அவர்கள் மேலும் கால அவகாசம் கேட்கிறார்கள்" என வரி மற்றும் நிதி நிலைக்குழு தலைவர் எம் எஸ் சிவப்ரசாத் தெரிவித்தார்.
நிர்வாகம், மூன்று அறிவிப்புகளையும் தாண்டி வரி கட்டத் தவருவோரின் அசையும் சொத்துக்களை பறிமுதல் செய்யமுடியும் என்றார் அவர்.
ஏற்றுக்கொள்ள இயலாத அறிவிப்பின் மூலம் பயமுறுத்தி பணத்தை வசூல் செய்யும் முயற்சி இது எனவும் இதை எதிர்கொள்ள சட்டத்தில் உள்ள அனைத்து வழிகளையும் மேற்கொள்ளும் எனவும் விப்ரோ தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications