மும்பை: அமெரிக்கவின் முன்னணி நிறுவனங்களில் ஆப்பிள் நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனத்தின் தயாரிப்புகளான ஆப்பிள் கம்ப்யூட்டர், லேப்டாப், ஐ- பேட், ஐ-பாட்கள் மற்றும் ஐ-போன்கள் ஆகியவை தரத்திற்கும், வடிவமைப்பிற்கும், செயல்திறனுக்கும் பெயர்பெற்றவை. ஆப்பிளின் தயாரிப்புகளைக் கையில் வைத்திருப்பதையே ஒரு கௌரவ அடையாளமாக நினைக்கும் பலர் உலகெங்கும் உள்ளனர். (இதில் நானும் ஒருவன்..)
ஆப்பிளின் 5-வது ஜெனரேஷன் டேப்லட்டான புத்தம் புதிய ஐ-பேட் ஏர் இந்த டிசம்பர் 7-ம் தேதிமுதல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. இந்தியாவில் ஆப்பிள் தயாரிப்புகளை விற்பனைக்கு விநியோகம் செய்து வரும், அதன் அங்கீகாரம் பெற்ற விற்பனையாளர்களான இன்கிராம் மைக்ரோ மற்றும் ரெடிங்டன் இந்தியா நிறுவனங்கள் இந்த ஐபேட் ஏர்-ஐ விற்பனை செய்யவுள்ளன. இதில் இன்கிராம் மைக்ரோ, பெருநிறுவனங்களுக்கும், ரெடிங்டன், சிறு வியாபாரிகளுக்கும் விற்பனை செய்வார்கள்.

ஐ-பேட் ஏர் சில்வர் மற்றும் ஸ்பேஸ் கிரே நிறங்களில் கிடைக்கும் 16 ஜிபி கொண்ட ஐபேட் ஏர் (வை-ஃபை மாடல்) ரூ.35,900 என்றும் 16 ஜிபி ஐபேட் மினி (வை-ஃபை) ரூ.28,900 என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக இன்கிராம் மைக்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இதன் விற்பனை இந்தியாவில் டிசம்பர் 7 ஆம் நாள் துவங்கும் என அந்நிறவனம் தெரிவிக்கிறது.
அமெரிக்காவில் நவம்பர் 1-ம் தேதியன்று வெளியிடப்பட்ட ஆப்பிள் குடும்பத்தின் புதுவரவான ஐபேட் ஏர், ஆப்பிள் நிறுவனத்தின் ஒர் அதிநவீன தயாரிப்பாகும். அதனுடைய 4-வது ஜெனரேஷன் ஐ-பேடை விட 20% மெல்லியதாகவும் 28% எடை குறைந்ததாகவும் (453 கிராம்) உள்ள ஐபேட் ஏர், 9.7 இன்ச் அளவுள்ள மிகத் துல்லியமான ரெட்டினா டிஸ்ப்ளேவையும் (ஆப்பிளின் கண்டுபிடிப்பு.. உண்மையிலே சூப்பரா இருக்கும்) கொண்டுள்ளதால் ஆப்பிள் விரும்பிகளிடம் இது அமோக ஆதரவைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications