மும்பை: இந்திய நாட்டின் முதன்மை கார் தயாரிப்பாளரான மாருதி சுசுகி நிறுவனத்தின் விற்பனை நவம்பர் மாதத்தில் 10.7% சரிந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் 1,03,200 கார்களை விற்ற அந்நிறுவனம் இந்த நவம்பரில் 92,140 கார்களை மட்டுமே விற்றுள்ளது.
உள்நாட்டு விற்பனை 5.9 விழுக்காடு குறைந்து கடந்த ஆண்டின் 90,882 என்ற எண்ணிக்கையில் இருந்து 85,510 என்ற அளவாக இருக்கிறது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிறிய ரக பயணிகள் கார்களான எம்800, ஆல்டோ, எ-ஸ்டார் மற்றும் வேகன் ஆர் ஆகியவற்றின் விற்பனை 3.7 விழுக்காடு வளர்ந்து 36,679 கார்களிலிருந்து 38,040 கார்களாக விற்பனை அதிகரித்துள்ளது.
ஸ்விப்ட், எஸ்டிலோ, ரிட்ஸ்
நடுத்தர வகை கார்களான ஸ்விப்ட், எஸ்டிலோ மற்றும் ரிட்ஸ் ஆகியவற்றின் விற்பனை 24 விழுக்காடு குறைந்து கடந்த ஆண்டான 23,849 கார்களை ஒப்பிடும்போது இந்த ஆண்டு 18,122 கார்கள் மட்டுமே விற்பனையானது.
டிசைர்
சிறிய ரக சொகுசு காரான டிசைர் 13.2 விழுக்காடு அதிகம் விற்று கடந்த ஆண்டு அளவான 13,502 கார்களிலிருந்து 15,286 கார்களாக உயர்ந்தது.
எஸ்எக்ஸ்4
நடுத்தர ரக சொகுசு கார் எஸ்எக்ஸ்4 விற்பனை கடந்த ஆண்டு அளவான 692ல் இருந்து மிகவும் குறைந்து 200 மட்டுமே விற்பனையானது. இது 71.1 சதவிகிதம் குறைவாகும். மேலும் சொகுசு காரான கிஜாஷி (Kizashi) ஒரே ஒரு கார் மட்டுமே விற்பனையானது. (ரொம்ப பாவம்...)
பல் உபயோக வண்டிகள்
பல் உபயோக வண்டிகளான எர்டிகா, க்ராண்ட் விராரா மற்றும் ஜிப்சி விற்பனை 7,439லிருந்து 5,840 குறைந்துள்ளது, அதாவது 21.5 விழுக்காடு குறைந்தது.
ஓம்னி மற்றும் ஈகோ
ஓம்னி மற்றும் ஈகோ வேன்கள் விற்பனை 7.3 விழுக்காடு குறைந்து 8650 என்ற அளவிலிருந்து 8021 என்ற அளவாக இருந்தது.
ஏற்றுமதி
நவம்பர் மாத ஏற்றுமதி 12,318 என்ற அளவிலிருந்து 6,630 ஆக குறைந்து 46.2 விழுக்காடு வீழ்ச்சியை அடைந்தது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications