சிண்டிகேட் வங்கி ரூ.200 கோடி நிதி தீரட்ட ஒப்புதல்!!! நிதி அமைச்சகம்..

இந்த மாதம் 3ஆம் தேதி நடந்த வங்கி இயக்குனர் குழு கூட்டம் நடந்தது, இக்கூட்டத்தில் ஒவ்வொரு பங்கும் ரூபாய்10 மதிப்புடன், முதல் சுற்றில் சுமார் ரூ.200 கோடியை திரட்ட மத்திய அரசு ஒப்புதல் வழங்கப்பட்டது என சிண்டிகேட் வங்கி மும்பை பங்குச்சந்தையில் செய்த பதிவில் தெரிவித்துள்ளது.
இந்த முதலீட்டு உதவி, நடப்பாண்டில் சிண்டிகேட் வங்கிக்கு இந்திய அரசின் 14,000 கோடி ரூபாய்க்கான முதலீட்டை உட்செலுத்தும் திட்டந்தின் ஒரு பகுதியாகும்.
அரசுத் துறை வங்கிகளின் குறைந்த பட்ச முதலீடு விகித விதிமுறைகளுக்கு உட்பட்டும் சிறந்த துறைகளின் கடன் தேவைகளை கருதியும் அரசு இந்த முதலீடு உட்செலுத்தும் திட்டத்தினை மேற்கொண்டுள்ளது.
2012-13 ஆம் ஆண்டில் சுமார் 12,517 கோடி ரூபாய் முதலீடு 13 அரசுடமை வங்கிகளில் உட்செலுத்தப்பட்டது.


Click it and Unblock the Notifications