சரிவில் தத்தளித்த லார்சன் & டூப்ரே இப்போது ஏறுமுகத்தில்!!..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: லார்சன் & டூப்ரோ ( எல் & டி) நிறுவனம் தொழில்நுட்பம், பொறியியல் , கட்டுமானம், உற்பத்தி மற்றும் நிதி சேவைகள் என பல துறைகளில் சிறந்து விளங்கி வருகிறது. இந்நிறுவனம் கடந்த காலாண்டில் கிட்டதட்ட 16 சதவீதம் நஷ்டம் அடைந்தது, இதனால் இந்நிறுவனம் பல வழிகளில் ஒப்பந்தம் பெறவும், லாபங்களை தீட்டவும் திட்டமிட்டது. இதன் எதிரொலியாக இந்நிறுவனத்தின் கட்டுமான பிரிவு இந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் ரூ.1,471 கோடி மதிப்புள்ள புதிய ஆர்டர்களை பல்வேறு வர்த்தக நிறுவனங்களிடம் இருந்து பெற்றுள்ளது என அந்நிறுவனம் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

 

மேலும் இந்த அறிக்கையில் அந்நிறுவனம் தான் பெற்ற ஒப்பந்தங்கள் பற்றி தெரவித்துள்ளது.

மின் பரிமாற்றத் துறை

மின் பரிமாற்றத் துறை

மின் பரிமாற்றம் மற்றும் விநியோகம் துறைசார்ந்த உள்நாட்டு மற்றும் சர்வதேச நிறுவனங்களிடம் சுமார் ரூ 686 கோடி மதிப்பிலான வணிக ஒப்பந்தங்களை பெற்றுள்ளது.

மின் விநியோக கட்டமைப்பு

மின் விநியோக கட்டமைப்பு

சவுதி அரேபியாவில் இயங்கி வரும் லார்சன் & டூப்ரோ நிறுவனத்தின் கிளை நிறுவனம் பெற்ற 132 கிலோ வோல்ட் மின் விநியோக கட்டமைப்பு அமைக்க பெற்ற ஒப்பந்தம் மற்றும் அல் தவாத்மி (132 கிலோ வோல்ட்) துணை நிலையத்தை ரியாத் மின்பிணையத்துடன் இணைக்கும் ஒப்பந்தமும் லார்சன் & டூப்ரோ பெற்ற ஒப்பந்தங்களில் அடங்கும்.

ஆந்திர பிரதேசம்
 

ஆந்திர பிரதேசம்

உள்நாட்டை பொறுத்தவரை, ஆந்திர பிரதேச மின் தொடரமைப்புக் கழகத்திற்காக வேல்லூரில் இருந்து எம்மிகனூர் வரை 400KW இரட்டை சுற்று மின் தொடரமைப்பை நிறுவ பெற்ற ஒப்பந்தமும் அடங்கும் என மும்பை பங்குசந்தைக்கு அளித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பவர் கிரிட் கார்ப்பரேஷன்

பவர் கிரிட் கார்ப்பரேஷன்

மத்திய அரசுக்கு சொந்தமான பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கு 765 / 400 KW ஜிஐஎஸ் துணை மின்நிலையம் அமைக்கவுள்ள ஒப்பந்தத்தையும் லார்சன் & டூப்ரோ பெற்றுள்ளது. இந்த ஒப்பந்த திட்டத்தின் கீழ் ஒப்பந்த கடல்மின் வழங்கல், உள்நாட்டு குடியிருப்பு கட்டுமான திட்டங்களும் அடங்கும்.

சென்னை மெட்ரோ ரயில்

சென்னை மெட்ரோ ரயில்

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தேவையான மின்சாரத்தை விநியோகிப்பதற்காக சென்னையில் 230/110/33 KW ஜிஐஎஸ் துணை மின் நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தத்தை தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகத்திடமிருந்து பெற்றுள்ளது.

கர்நாடகம்

கர்நாடகம்

குடியிருப்பு மற்றும் தொழிற்சாலை கட்டிடங்களை கட்டுவதற்காக ரூ 461 கோடி மதிப்புள்ள ஒப்பந்தங்கள் கிடைத்துள்ளது. கர்நாடக மாநிலம் சிட்டபூரில் சிமெண்ட் ஆலை கட்ட பெறப்பட்டுள்ள ஒரு புதிய ஒப்பந்தத்தில் ஆலை கட்டமைப்பு மற்றும் அதன் தொடர்புடைய நடவடிக்கைகள் அனைத்தும் அடங்கும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பங்கு சந்தை

பங்கு சந்தை

எல் & டியின் பங்கு 4.65 விழுக்காடு அதிகரித்து, தற்போது 1086.65 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

L&T Construction bags Rs 1,471-crore orders

Larsen & Toubro (L&T) said its construction division had won new orders worth Rs 1,471 crore across various business segments in November and December this year.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X