ஹைதராபாத்: உலகிலேயே மிகப்பெரிய மல்ட்டிபிளக்ஸ் அரங்க நிறுவனங்களில் நான்காவது இடத்தில் உள்ள சினிபோலிஸ் நிறுவனம் மெக்சிகோ நாட்டை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்நிறுவனம் 3,300 திரையரங்கங்களை 11 நாடுகளில் கொண்டுள்ளது. தற்போது ரூ.100 கோடி மதிப்பில் 50 திரை அரங்குகளை ஆந்திர பிரதேசத்தில் கட்டுவதற்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இதை 30 மாதங்களில் செயல்படுத்த முனைந்துள்ளது.
ஐதராபாத்தில் உள்ள மல்ட்டிபிளக்ஸ் அரங்கங்களில் கூட்டம் அதிகமாக இருப்பதால் எங்களுடைய அரங்கங்களின் எண்ணிக்கையை பெருக்குவதற்கு நிறைய சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. ஒரு சில வருடங்களில் மேலும் 45 திரைகள் ஐதராபாத்தில் வர விருந்தாலும், மற்றவை விஜயவாடாவில் வெகு விரைவில் தொடங்கப்பட உள்ளது என்று அந்நிறுவனத்தின் முத்த அதிகாரி தெரிவித்தார்.

கே.பி.எம்.ஜி என்ற கண்ஸல்டன்சி நிறுவனம் தயாரித்துள்ள அறிக்கையின் படியும், இந்திய வணிக மற்றும் தொழில் கூட்டமைப்பின் அறிக்கையின் படியும் (FICCI) இந்தியாவில் உள்ள 12,000 திரையரங்குகளில் 8 சதவிகிதமே மல்ட்டிபிளக்ஸ்களில் உள்ளன. ஆனாலும் வசூலில் மூன்றில் ஒரு பங்கினை இந்த அரங்குகள் திரட்டுகின்றன.
இந்தியாவில் உள்ள மல்ட்டிபிளக்ஸ்களில் ஒரு நாளைக்கு 6 ஷோக்கள் நடக்கும் போது 25% ஆக சராசரி மக்களின் வருகை உள்ளது, ஆனால் ஆனால் சினிபோலிஸ் இது 30% ஆகும். இதே அளவில் ஐதராபாத்திலும் திரையரங்குகளை நடத்த முடியும் என்று சம்பத் நம்பிக்கை தெரிவித்தார்.
சினிபோலிஸ் நிறுவனம் ஆந்திர சந்தையில் ஐந்து திரை கொண்ட திரையரங்கை ஐதராபாத்தில் குக்கட்பள்ளியிலுள்ள மஞ்சீரா மாலில் கடந்த புதன் கிழமை திறந்துள்ளது. இந்த மாலின் திரையரங்குகள் 20 லட்சம் மக்களை குறிவைத்து நிறுவப்பட்டது என அவர் தெரிவித்தார்.
சினிபோலிஸ் நிறுவனம் இந்தியாவில் 2009 ஆம் ஆண்டு அமிர்தசரஸில் அடுக்குத்திரையை நிறுவியது. இப்போது 14 நகரங்களில் 84 திரையரங்குகளை இயக்கி வருகிறது. இதில் 40 சதவிகிதம் மெட்ரோ நகரங்களில் உள்ளது. இந்நிறுவனம் 450 திரைகளை 2016 ஆம் ஆண்டிற்குள் வெளியிட ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் 80 திரைகள் ஒவ்வொன்றும் ரூபாய் 2 கோடியில் வடிவமைக்கப்பட உள்ளது என அவர் தெரிவித்தார்.
'10 லட்சத்திற்கும் மேலுள்ள மக்களை கொண்ட நகரங்களே எங்களின் இலக்கு' என்று சம்பத் குறிப்பிட்டார். மேலும் இன்னும் நான்கறை ஆண்டுகளில் அந்நிறுவனத்தின் செயல்பாடுகள் நிறுத்தப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.


Click it and Unblock the Notifications