
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கார்பொரேஷன் வங்கி பொது மேலாளர் வி எஸ் கார்த்திகேயன் மற்றும் பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் வர்த்தக வாகனங்கள் துறை உபதலைவர் சி கே ராவ் ஆகியோரால் கையெழுத்திடப்பட்டது.
இதன் மூலம் கார்பொரேஷன் வங்கி பஜாஜ் நிறுவனத்தின் மூன்று சக்கர வாகனங்களுக்கு விரும்பத்தக்க கடனாளராக விளங்கும். மேலும் கார்பொரேஷன் வங்கி வாடிக்கையாளர்களுக்கு பயன் அளிக்கும் வகையில் குறைந்த வட்டியிலும், நீண்ட கால தவனை முறையில் கடன் வழங்க திட்டமிட்டுள்ளது.
"எங்கள் வங்கி மதிப்புக் கூட்டப்பட்ட மற்றும் புதிய சில்லறை வர்த்தக சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு தருவதில் முன்னோடியாக உள்ளது. இந்த ஒப்பந்தம் அந்த பாதையில் அடுத்த கட்டம்" என்று தெரிவித்த திரு கார்த்திகேயன் மேலும் கடனை பரிசீலிப்பதிலும் வழங்குவதிலும் அவர்கள் எடுத்துக்கொள்ளும் அவகாசம் மிகவும் குறைந்ததும் சிறந்ததும் ஆகும் என்றும் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications