குடிமக்களுக்கு இலவச தொலைதொடர்பு சேவை!! கத்தார் நாட்டின் அசத்தலான ஆஃபர்...

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கத்தார்: வெளிநாடு செல்லும் தன்நாட்டு மக்களுக்கு இலவச தொலைபேசி சேவையை தந்து அசத்தியுள்ளது கத்தார். இந்த திட்டந்தின் முதல் பகுதியாக 82 நாடுகளுக்கு செல்லும் குடிமகன்களுக்கும், அடுத்த கட்டமாக மேலும் 16 நாடுகளுக்கு விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகத்தின் தகவல் தொழில்நுட்பத்துறை தெரிவித்துள்ளது.

 

82 நாடுகளுடன் இணைந்து கத்தார் நாட்டின் டெல்கோ ஊரிடோ நிறுவனம் இத்தகையை இலவச சேவையை வழங்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாக கல்ப் டைம்ஸ் பத்திரிக்கை, 82 நாடுகளின் பெயரைக் குறிப்பிடாமல் செய்தி வெளியிட்டுள்ளது.

"வெளிநாடு செல்லும் குடிமகன்களுக்காக துவங்கப்பட்டுள்ள இந்த இலவச தொலைபேசி திட்டமானது, ஏற்கனவே உள்ள தவசுல் எனப்படும் தகவல் சேவைக்கும் மேலானது எனவும் அமைச்சகத்தின் தொலைநோக்குப் பார்வையான வெளிநாடு செல்லும் குடிமக்களை பாதுகாக்கும் திட்டத்தினை நினைவாக்கும் முயற்சி எனவும் தகவல் தொழில்நுட்பத் துறை இயக்குனர் சைப் அல்-குவாரி தெரிவித்தார்.

தொடர் கண்காணிப்பு

தொடர் கண்காணிப்பு

இந்த ஏற்பாட்டின் மூலம் குடிமக்களிடமிருந்து அமைச்சகத்தில் பெறப்படும் தகவல்கள் நாள் முழுவதும் அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்படும். அமைச்சக அலுவலகம் கத்தார் நாட்டு தூதரகங்களுடனும் ராஜதந்திர அமைப்புகளுடனும் தொடர்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டணத்தை ஏற்கும் அரசு

கட்டணத்தை ஏற்கும் அரசு

குடிமகன்கள் இலவசமாக தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசலாம். இதற்கான கட்டணம் அமைச்சகத்தினால் ஏற்கப்படும்.

ஒரே எண் 8000 8000 100

ஒரே எண் 8000 8000 100

எல்லா நாடுகளிலும் ஒரே தொலைபேசி எண்ணை பெற முயற்சி செய்ததாகவும் ஆனால் அது முடியவில்லை எனவும், அதனால் 8000 8000 100 என்ற எண்ணை 42 நாடுகளில் உபயோகிக்க முடிவு செய்துள்ளதாகவும் அல்-குவாரி தெரிவித்தார். பிற நாடுகளில் வேறு எண்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரவேற்பு செய்தி
 

வரவேற்பு செய்தி

வெளிநாட்டில் சென்று இறங்கும் குடிமகனுக்கு உடனடியாக ஒரு வரவேற்பு செய்தி அனுப்பப்படும் என்றும் தெரிகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Qatar launches free telephone service for citizens travelling abroad

Qatar has launched a free telephone number service meant for its citizens travelling to 82 countries.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X