சென்னை: பொதுவாக முதலீட்டு திட்டத்தை தேர்ந்தெடுக்கும்போது அதில் கிடைக்கும் லாபம் மற்றும் விலைவுகளை மட்டும் பார்க்க கூடாது, அதில் உள்ள ஆபத்துகளையும் பார்க்க வேண்டும். இத்தகையை குழப்பங்களை தீர்க்க வந்தது தான் யூலிப் (ULIP) முதலீட்டு திட்டம். யூனிட் லிங்க்ட் இன்இன்சூரன்ஸ் திட்டத்தின் சுருக்கமே யூலிப் திட்டம். இத்திட்டத்தை பற்றி அறிந்தவர்கள் இதன் நன்மையை நன்கு உணர்ந்து இருப்பார்கள்.
இத்திட்டம் வாடிக்கையாளர்களுக்கு ஏற்றவாறு, சிரத்தை எடுத்து முதலீடு செய்து அதிக லாபம் பார்க்கவும் மற்றும் பாதுகாப்புடன் முதலீட்டை பத்திரபடுத்துகொள்ளவும் வழிவகை செய்கிறது. இத்திட்டத்தை பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் இங்கு பார்ப்போம்.
உதராணமாக, ஹரீஷ் (35) ஒரு தொழிலதிபர். அவர் பொதுவாக வியாபரத்தில் கிடைக்கும் லாபத்தை மீண்டும் வியாபரத்தில் முதலீடு செய்பவர். ஆனால் இப்பொழுது அவர் பங்கு சந்தை சார்ந்த திட்டத்தில் முதலீடு செய்ய விரும்புகிறார். இத்தகைய முதலீட்டின் மூலம் அவர் பெரும் லாபத்தை அடைய முடியும் என அவர் நம்புகிறார்.
இந்நிலையில் ஹரீஷ் மனைவி மீனாவின் பார்வையில் வியாபாரமும், பங்கு சந்தையும் எற்ற தாழ்வு நிறைந்தது. அதனால் பணத்தை பாதுகாப்பான திட்டத்தில் முதலீடு செய்வது தான் சிறந்தது என கருத்து தெரிவிக்கிறார். அதனை ஏற்ற ஹரீஷ் தன் குடும்பம் தன்னையும் தன் தொழிலையும் மட்டும் சார்ந்து இருக்க கூடாது என் நினைக்கிறார்.
சரி இந்நிலையில் இவருக்கு யூலிப் திட்டம் எப்படி உதவுகிறது என்று பார்ப்போம்!!
| முதலீட்டு முறை | |||
| வாழ்வின் சில முக்கிய பருவம் | வாலிப பருவம் | திருமணமானவர்கள், பெற்றோர்கள் | ஓய்வு பெற உள்ளவர்கள் |
| குறிக்கோள் | செல்வம் அல்லது சொத்துகளை அதிகரித்தல் | குழந்தைகளுக்காக பணம் சேர்த்தல் | சொத்துகளை பாதுகாத்தல் |
| யூலிப் திட்டத்தின் உதவி | அதிகபடியாக முதலீடு செய்ய வேண்டும் | சமபங்கில் முதலீடு செய்தல் | நிலையான முதலீட்டு திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும் |
யூலிப் திட்டத்தின் தனித்துவம்
யூலிப் திட்டம் நம் பணத்தின் ஒரு பகுதியை பங்கு சந்தையிலும், மற்றொரு பகுதியை நிலையான வருவாய் கிடைக்கும் திட்டத்தில் முதலீடு செய்யப்படும்.
முதலீடு செய்யும் முறை
இத்திட்டம் தேர்ந்தெடுக்கும்பட்சத்தில், நம் விருப்பத்திற்கு ஏற்றார் போல் நம் பணத்தை முதலீடு செய்யலாம். இத்திட்டத்தை துவங்குவதற்கு முன்னும், திட்ட காலத்திலும் விருப்பத்திற்கு ஏற்றார் போல் மாற்றிக்கொள் முடியும்.
ரிஸ்க்கு எல்லாம் ரஸ்கு மாதிரி...
நம் வாழ்வில் சில சமையத்தில் ரிஸ்க் எடுக்க விருப்பம் இல்லாமல் நிலையான வருவாய் திட்டத்தில் முதலீடு செய்ய வரும்புவோம், அதே வேளையில் சில சமயம் ரிஸ்க் எடுத்து அதிகப்படியான லாபம் ஈட்ட எண்ணுவோம். இம்மாறுபட்ட நிலைக்கு தகுந்தது யூலிப் திட்டம்.
வரி சலுகை
இத்திட்டத்தின் மற்றொரு சிறப்பாக இதில் காப்பிடும், 80சி சட்டத்தின் கீழ் ஒரு லட்சம் வரை வரி சலுகை அளிக்கப்படும். மேலும் உங்கள் முதலீட்டை மற்றவரின் கணக்குகளுக்கும் மாற்றிக்கு கொள்ளலாம்.
முடிவுரை
இந்த யூலிப் திட்டம் நம் எண்ணத்திற்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துக்கொள்ளும் வசதி இத்திட்டத்திற்கு உள்ளது. நீங்கள் நிலையான வருவாய் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டுமா, பங்கு சந்தையில் முதலீடு செய்ய வேண்டுமா அல்லது இரண்டிலும் முதலீடு செய்ய வேண்டுமா அனைத்திற்கும் யூலிப் திட்டம் பொருந்தும். மேலும் இத்திட்டத்தில் காப்பீடு மற்றும் வரிச் சலுகையும் அடங்கும். முதலீட்டாளர்களுக்கும் இதை விட சிறந்த திட்டம் எதுவும் இருந்திட முடியாது.
More From GoodReturns

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

40 வயதில் முதலீடு செய்ய தொடங்கினால் ரூ.3 கோடி சாத்தியமா? நிபுணர்கள் சொல்லும் அதிர்ச்சி உண்மை!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

ரூ.4கோடி கார்பஸ்! உங்கள் ரிட்டையர்மென்ட்டை ராஜவாழ்க்கையாக்குவது எப்படி? கோடீஸ்வர கனவு நனவாகுமா?

EPF முதல் SSY வரை: உங்கள் பணத்திற்கு அதிக லாபம் தரும் சிறந்த முதலீடு எது?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஈரான் போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக நடந்த விலை மாற்றம்..!!

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?

ஒரு நேர சாப்பாட்ட நிறுத்திட்டு அந்த காசுக்கு வெள்ளி வாங்கி வைங்க!! ராபர்ட் கியோசாகி அதிரடி!!

வெறும் ரூ.200 போதும்! உங்கள் மகளின் எதிர்காலத்திற்கு ரூ.40 லட்சம் சேமிக்கலாம் - எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications