விற்பனையில் சரிவு!! கவலையில் மோட்டார் வாகன உற்பத்தியாளர்கள்...

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்தியாவில் உள்நாட்டு கார் விற்பனை நவம்பர் மாதத்தில் சுமார் 8.15 சதவீதம் குறைந்து 1,42,849 என்ற எண்ணிக்கையில் இருந்தது. இது கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் 1,55,535 என்ற எண்ணிக்கையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

விற்பனையில் சரிவு!! கவலையில் மோட்டார் வாகன உற்பத்தியாளர்கள்...

இந்திய மோட்டார் வாகன உற்பத்தியாளர் சங்கம் வெளியிட்டுள்ள தகவல்கள் படி மோட்டார் சைக்கிள்கள் விற்பனையானது 1.44 சதவிகிதம் உயர்ந்து கடந்த ஆண்டை ஒப்பிடும்போது 8,67,508 என்ற எண்ணிக்கைகளிலிருந்து 8,80,015 ஆக உயர்ந்தது.

கடந்த ஆண்டின் விற்பனையை ஒப்பிடும் பொது 11,75,441 ஆக இருந்த இருசக்கர வாகன விற்பனையானது நவம்பர் மாதத்தில் 5.55 சதவிகிதம் உயர்ந்து 12,40,732 ஆக இருந்தது.

வர்த்தக வாகனங்கள் மொத்த விற்பனை கடந்த ஆண்டின் 61,403 என்ற எண்ணிக்கையிலிருந்து 28.78 சதவிகிதம் குறைந்து இந்த வருடம் 43,730 ஆக இருந்தது என்று அச்சங்கம் தெரிவித்துள்ளது.

பொதுவாக வாகன விற்பனை நடப்பு நிதியாண்டின் நவம்பர் மாதத்தில் 0.9 சதவிகிதம் உயர்ந்து 15,26,438 என்ற அளவை எட்டியது. இது கடந்த ஆண்டில் இதே மாதத்தில் 15,12,869 என்று இருந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India's domestic car sales dip 8 pct, motorcycles up 1.44 pct in November

Domestic passenger car sales in India declined 8.15 per cent to 1,42,849 units in November this year as compared to 1,55,535 units sold in the same month last year.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X