இனி வீட்டில் இருந்தபடியே கார் வாங்கலாம்!! ஒரு பட்டன் தட்டினா போதும்...

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: ஜப்பானிய நிறுவனமான நிசான் மோட்டார்ஸ் தற்போது தனது கார்களையும், அதன் அனைத்து உதிரி பாகங்களையும் இந்தியாவில் இணைய தளம் மூலம் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. 'இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களது வாகனங்களை இணைய தளத்தில் பதிவு செய்வது மட்டுமல்லாமல் அதன் பணத்தையும் கிரெடிட் கார்டுகள் மூலம் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்படும்.

கார் தயார் நிலையில் வந்தவுடன் வாடிக்கையாளரின் வீட்டுக்கு அருகில் உள்ள டீலர்கள் மூலம் டெலிவரி செய்யப்படும்' என்று நிசான் மோட்டார்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நிசான் மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனை நிறுவனமான ஹோவர் ஆட்டோமோட்டிவ் இந்தியாவை சேர்ந்த மார்கெட்டிங் இயக்குனர் நிதிஷ் டிப்னிஸ் கூறுகையில், 'இன்றைய காலங்களில் அதிக பட்ச கார் வாடிக்கையாளர்கள் இணைய தளங்களுக்கு சென்று பார்த்து விட்டு தான் முடிவுகளை எடுக்க முற்படுகின்றனர், எனவே தான் கொள்முதல் செயல்பாடுகளை இணையத்திலும் விரிவுபடுத்தியுள்ளோம்' என்றும் அவர் தெரிவித்தார்.

விரைவான சேவை

விரைவான சேவை

கொள்முதல் சுழற்சியை எளிமையாகவும், விரைவாகவும் மற்றும் வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் வகையிலும் செய்ய இத்தகைய முயற்சி மேற்கொள்வதாவும் தெரிவித்தார். இவ்வாறு செய்யம் போது விற்பனையின் நேரம் குறைவாகவும் சிறப்பாகவும் எந்த ஒரு சேவை குறைபாடுமில்லாமல் இருக்கும் என்று விளக்கினார்.

தள்ளுபடியுடன் இணைய வர்த்தகம்

தள்ளுபடியுடன் இணைய வர்த்தகம்

'இணைய வணிகம் சார்ந்த நுகர்வோரை கவரும் வகையில் இந்த நிறுவனம் இணைய தளத்தில் மூலம் கர்களை பதிவு செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தும் என்றும் அவர்களை ஈர்க்கும் வகையிலான தள்ளுபடிகளையும் வழங்கும்' என்றும் அவர் தெரிவித்தார்.

முன்னணி கார் நிறுவனங்கள்

முன்னணி கார் நிறுவனங்கள்

முதன்மையான கார் உற்பத்தியாளர்களான மாருதி சுஸுகி மற்றும் ஹுன்டாய் ஆகியவை கார்களை இணைய தளத்தில் விற்பனை செய்வது கிடையாது.

கேள்விக்ளுக்கு பதில் மட்டும்
 

கேள்விக்ளுக்கு பதில் மட்டும்

ஆனால், இந்த முன்னணி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் கேள்விகளை இணையம் மூலம் சேகரித்து, அவற்றை தங்களுடைய டீலர்கள் வழியாக விற்பனையாக மாற்றுகின்றனர்.

அசத்தலான கார் மாடல்கள்

அசத்தலான கார் மாடல்கள்

இந்தியாவில், நிசான் பல ரக வாகனங்களையும் விற்பனை செய்து வருகின்றது. இவற்றில் ஹேச்பாக் மைக்ரா, மிட்சைஸ்ட் செடான் சன்னி, நிசான் இவாலியா, மற்றும் புதிதாக அறிமுகப்படுத்திய கச்சிதமான எஸ்.யு.வி எக்ஸ் ட்ரயில் மற்றும் எஸ்.யு.வி. டெர்ரானோ ஆகிய கார்கள் அடங்கும்.

விலை!!

விலை!!

இந்நிறுவனத்தின் கார் இந்தியாவில் சுமார் 4.9 லட்சத்திலிருந்து 26.96 லட்சம் வரை உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Nissan to sell cars via internet in India

Japanese car major Nissan has that it will sell cars online in India and make its entire product line up available for purchase via internet.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X