அமெரிக்க டாலரை விட இவங்க தான் ஒசத்தி.. அட மெய்யாலுமே தான்பா!

சென்னை: கடந்த சில வாரங்களாக டாலரின் மதிப்பிலும் வர்த்தகத்திலும் மந்தமான நிலை நிலவுவதால் வளரும் நாடுகளின் சந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. சில மாதங்களுக்கு முன்பு டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 68 வரை சென்று அதளபாதளத்தை எட்டியது.

இந்நிலையில் இந்தியா மட்டுமல்லாமல் மற்ற நாணயங்களான பிரேசிலியன் ரியல் ஆகியவையும் மோசமாகவும், கடுமாயாகவும் பாதிக்கப்பட்டது.

ரூபாய் மதிப்பு நிலைமை இப்படியிருக்கும் போது, அமெரிக்க டாலரை விட அதிக மதிப்பு வாய்ந்த நாணயங்கள் நிறைய உள்ளன என்று தெரிந்தால் உங்களில் பலர் ஆச்சரியப்படுவீர்கள்.

குவைத்

குவைத்

நாணயம்: தினார். 

உலகிலேயே குவைத் தினார் தான் அதிக மதிப்புள்ள நாணயமாக கருதப்படுகிறது. இந்த நாணயம் 1961ஆம் ஆண்டு வளைகுடாவின் ரூபாய்க்கு பதிலாக அறிமுகப்படுத்தப்படடது. இது ஒரு பவுண்டு ஸ்டெர்லிங்கிற்கு சமமானதாக இருந்தது.

பஹ்ரைன்

பஹ்ரைன்

நாணயம்: தினார்.  

பஹ்ரைன், தினாரை 1965ஆம் ஆண்டில் வளைகுடாவின் ரூபாய்க்கு பதிலாக அறிமுகம் செய்தது. ஆரம்ப காலத்தில் ஒரு தினார் 10 ரூபாய்க்கு சமமாய் இருந்தது. தினார் என்ற பெயர் ரோமனிய வார்த்தையான தினேரியஸ் என்ற பெயரில் இருந்து உருவானதாகும்.

 

ஓமன்

ஓமன்

நாணயம்: ரியால். 

1940 ஆம் ஆண்டிற்கு முன் இந்திய ரூபாய் மற்றும் மரியா தெரெசா தாலிர் அல்லது ரெயில் என்று உள்ளூரில் அழைக்கப்பட்ட நாணயம் தான் மஸ்கட்டிலும் ஓமனிலும் முக்கிய நாணயமாக கருதப்பட்டது. ஆனால் 1940-ஆம் ஆண்டிற்கு பின்பு சௌதி ரியால் ஓமன் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.

 

லாட்வியா (Latvia)

லாட்வியா (Latvia)

நாணயம்: லாட்ஸ். 

ரஷ்யா லாட்வியாவை கைப்பற்றிய போது லாட்வியாவின் நாணயமான லாட்ஸிற்கு பதிலாக சோவியத்தின் ரூபிள் என்ற நாணயம் பயன்பாட்டிற்கு வந்தது. லாட்வியா அதன் சுதந்திரம் பெற்ற பின் 1993-இல் அதன் நாணயம் மீண்டும் புழக்கத்திற்கு கொண்டு வரப்பட்டது.

 

இங்கிலாந்து (யுனைடெட் கிங்டம்)

இங்கிலாந்து (யுனைடெட் கிங்டம்)

உலகிலேயே மிகவும் பழமையான பயன்பாட்டில் உள்ள நாணங்களில் ஒன்றாக ஸ்டெர்லிங் உள்ளது. அமெரிக்க டாலர், யூரோ மற்றும் ஜப்பானின் யென்னிற்கு அடுத்து அந்நிய செலாவணி சந்தையில் பண்டை மாற்றம் செய்வதில் நான்காவது இடம் வகிக்கிறது.

 

பாக்லேண்ட் தீவுகள் (Falkland Islands)

பாக்லேண்ட் தீவுகள் (Falkland Islands)

நாணயம்: பவுண்ட். 

பவுண்ட் என்பது பாக்லேண்ட் தீவுகளின் நாணயமாகும். இது தென் அட்லாண்டிக் பெருங்கடலில் பிரிட்டிஷின் தொகுதியாகும். இந்த நாணயம் '£' என்றும் FK£ என்றும் மற்ற பவுண்ட் ரகங்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டும் வகையில் குறிக்கப்படுகிறது.

 

ஜிப்ரால்டர் (Gibraltar)

ஜிப்ரால்டர் (Gibraltar)

நாணயம்: பவுண்ட். 

ஜிப்ரால்டரின் நாணயம் '£' என்று குறிக்கப்படுகிறது. இதனை அதன் மதிப்பிற்கேற்ப பிரிட்டிஷின் பவுண்டு ஸ்டெர்லிங்க்கு மாற்றிக்கொள்ளலாம்.

 

ஜோர்டான்

ஜோர்டான்

மேற்கு ஆசிய பகுதியில் முக்கிய பொருளாதார பகுதியாக விளக்கும் அரபு நாடான ஜோர்டான் நாணய மதிப்பு அமெரிக்க டாலரை விடவும் அதிகமாகும்.

சவுதி அரேபியா, ஈராக், சிரியா, மற்றும் இஸ்ரேல் பாலஸ்தின் நாடுகளை எல்லைகளாக கொண்ட ஜோர்டான் ஆசிய கண்டத்தில் முக்கிய வர்த்தக பகுதியாக உள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள்

யூரோ என்பது யூரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 17 நாடுகளின் அதிகாரப்பூர்வமான நாணயமாகும். இந்த 17 நாடுகளில் பெல்ஜியம், பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், இத்தாலி, நெதர்லாந்து, போர்ச்சுக்கல் மற்றும் ஸ்பெயின் போன்றவையும் அடங்கும்.

 

அஜர்பெய்ஜான் (Azerbaijan)

அஜர்பெய்ஜான் (Azerbaijan)

நாணயம்: மனாத். 

மனாத் அஜர்பெய்ஜானின் நாணயம். மனாத் என்பது மோனிடா (நாணயம்) என்ற ரஷிய சொல்லில் இருந்து வந்ததாகும்.1919 முதல் மூன்று மனாத் நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. மிக அண்மையில், இது 2006-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.

 

கேமன் தீவுகள் (Cayman Islands)

கேமன் தீவுகள் (Cayman Islands)

நாணயம்: டாலர். 

டாலர் பயன்படுத்துவதற்கு முன்பு கேமன் தீவுகள் ஜமைக்கன் டாலர்களை பயண்படுத்தி வந்தது. 1972 ஆம் ஆண்டில் கேமன் தீவுகளின் நாணயம் டாலராக மாற்றப்பட்டது. மேலும், இந்த தீவுகளில் டாலர் சட்டபூர்வமாகவும் அங்கிகரிக்கப்பட்டது.

 

நாணைய மதிப்பு..

நாணைய மதிப்பு..

ஒன்று நினைவில் கொள்ள வேண்டியது உயர்ந்த விலை நாணயங்கள் என்பது சிறந்த முதலீடுகளாகவோ அல்லது ஒரு தேசத்தின் பொருளாதார வலிமையையோ குறிப்பதில்லை.

கட்டுதுடா சாமி..!

கட்டுதுடா சாமி..!

சமுக வளைதள இணைப்புகள்

சமுக வளைதள இணைப்புகள்

இனி உங்கள் தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், கூகிள் பிளஸ் மற்றும் டிவிட்டர் பக்கங்களின் மூலமும் இணைந்திடலாம்.

கிளிக் பண்ணுங்க.. ஷேர் பண்ணுங்க..

 

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+