மும்பை: ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர், முகேஷ் அம்பானி, பஞ்சாபில் 4ஜி சேவைகளுக்கான தொலைதொடர்பு கட்டமைப்பை மேம்படுத்த, தனது நிறுவனம் பாரதி ஏர்டெல் நிறுவனத்துடன் கைகோர்க்க தயாராக உள்ளது என்று முகேஷ் அம்பானி தெரிவித்தார்.
இதுதவிர, இந்த இரண்டு நிறுவனங்களும், இம்மாநிலத்தின் 4ஜி தொலைத்தொடர்பு சேவைகளுக்கான டிஜிட்டல் கட்டமைப்புக்காக ரூ.6,500 கோடி மதிப்புள்ள முதலீட்டு திட்டங்களை தனித் தனியாக அறிவித்துள்ளன.

"பஞ்சாபிகள் இந்தியாவின் அடையாளத் தூதர்கள். ஏற்கனவே பஞ்சாபில் உற்பத்தி, சில்லரை வணிகம் ஆகியவற்றில் எங்கள் நிறுவனம் ஈடுபட்டு உள்ளது. இப்போது, 4ஜி சேவைகளுக்கான எங்களுடைய முதல் டிஜிட்டல் கட்டமைப்பை ரூ.2500 கோடி முதலீட்டில் ஏற்படுத்தி வருகிறோம்.", என்று பஞ்சாப்பில் நடந்த ஒரு உச்சி மாநாட்டில் தெரிவித்தார்.
"நண்பர் திரு.மிட்டல் அவர்களின் நிறுவனத்துடன் கூட்டு முயற்சி கொள்வதின் மூலம் டிஜிட்டல் அனுபவத்தை மேலும் மெருகூட்ட இயலும்.", என்றும் திரு.அம்பானி கூறினார்.
அதே சமயம், 4ஜி சேவைகளுக்கான டிஜிட்டல் கட்டமைப்புகளை ஏற்படுத்த ரூ.4000 கோடி முதலீடு செய்வதாக பாரதி ஏர்டெல் நிறுவனம் பஞ்சாப் அரசாங்கத்துடன் முதல்கட்ட ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. ஏர்டெல் நிறுவனம் ஏற்கனவே சண்டிகர், மொகாலி உள்ளிட்ட நகரங்களில் 4ஜி சேவைகளைத் துவக்கிவிட்டது.

4ஜி அதிவேக வயர்லெஸ் சேவைகளை இந்தியா-முழுக்க அளிக்க தற்போது காற்றலை உரிமம் உள்ள ஒரே நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் மட்டுமே.
மிட்டல் அவர்களின் ஏர்டெல் நிறுவனத்துக்கு ரிலையன்ஸ் அதிபர் திரு.அம்பானி நட்புகரம் நீட்டுவது இது இரண்டாவது முறை. கடந்த ஏப்ரல் மாதம், இந்த இரண்டு நிறுவனங்களும் ஆழ்கடல் கேபிள் இணைப்பு கொள்திறனை பங்கிட்டுக் கொள்ள கரம் கோர்த்தன என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications