
நடப்பு நிதியாண்டில் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த கடன் மாற்றுத் திட்டங்களின் மீதான கவலைகளால் நீண்ட முதிர்வு காலம் கொண்ட அரசுப் பத்திரங்களின் வருமானம் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்த கடன் மாற்று முறை மூலமாக, குறைந்த கால கடன்களை அரசு பெற்று அதற்கு பதிலாக 2014-15, 2015-16 மற்றும் 2016-17 ஆண்டுகளில் முதிர்வுரும் நீண்ட கால கடன் பத்திரங்களை விற்கும். ரிசர்வ் வங்கி இந்த கடன்களை வாங்கும் அல்லது விற்கும் செயல்களில் ஈடுபடாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
நிதி நடுநிலைத் தன்மைக்காக திட்டமிடப்பட்டுள்ள இந்த பரிவர்த்தனை, கடன் மீட்சியை இலகுவாக்கி, அரசின் கருவூலத்தைக் காக்கும்.
இந்த திட்டம் எப்பொழுது நடைமுறைக்கு வரும் என்ற நிதி அமைச்சக அதிகாரிகளை கேட்டுபோது "வெகு விரைவில்" என்று ஒருவரும், மற்றொவர் இரண்டாம் அரையாண்டில் சந்தை நிலைகளைப் பொறுத்து "தேவையான தருணத்தில் நிகழும்" என்று தெரிவித்தனர்.


Click it and Unblock the Notifications