மருத்துவ காப்பிட்டுத் திட்டங்களுக்கு நிலையான நெறிமுறைகள் அவசியம்!! ஐஆர்டிஏ...

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மருத்துவ காப்பிட்டுத் திட்டங்களுக்கு நிலையான நெறிமுறைகள் அவசியம்!! ஐஆர்டிஏ...
டெல்லி: மருத்துவ காப்பிட்டுத் திட்டங்களுக்கு நிலையான நெறிமுறைகள் இல்லாததால் மருத்துவச் செலவுகள் சீராக இல்லை என்பதாலும், காப்பிட்டு திட்டங்களை மக்கள் எளிதில் பெறக்கூடிய வகையில் மாற்றி அமைப்பது அவசியம் என்றும் காப்பிட்டு ஒழுங்குமுறை ஆணையத்தின் தெரிவித்தது.

"மருத்துவ செலவுகளைப் பொருத்தவரை, ஒரு நிலையான நெறிமுறைகளை பயனீட்டாளர்களுக்கு உதவும் வண்ணம் எளிதாக்குவதோடு, சேவையை வழங்கும் நிறுவனங்களும் அதிகம் பாதிக்கப்படாமலும் உருவாக்குவது அவசியமானதாகிறது" என்று அவ்வாணையத்தின் உறுப்பினர் (ஆயுள் அல்லாத காப்பீடுகள்) திரு எம் ராமபிரசாத் தெரிவித்தார்.

பல்வேறு நோய்களை குணப்படுத்த தேவையான செலவுகளை பொது ஆரோக்கிய கொள்கை மூலம் சமாளிக்க ஒரு தேவை ஏற்பட்டுள்ளதாக அவர் மருத்துவக் காப்பீட்டு மாநாட்டின் பொது தெரிவித்தார்.

திரு ராம்பிரசாத் மேலும் கூறுகையில் ஆணையம் இதுபோன்ற பிரச்சனைகளை மிகவும் கவனத்தோடு ஆராய்ந்து கொண்டிருப்பதாகவும் இதில் நல்ல பலன்களை அடைய அனைத்துத் தரப்பினரின் ஈடுபாடு மிகவும் அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.

மருத்துவக் காப்பீடு திட்டங்கள், அவற்றின் வகைகள் மற்றும் வசதிகளை கொண்டு பார்கையில் இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் ஒரு நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது. எனினும் காலப்போக்கில் இதில் பல்வேறு சவால்கள் தீர்க்கப்படவேண்டி உள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.

மக்கள் பயன்படுத்திக்கொள்ள மலிவான செலவிலும் தொடர்ந்தும் சேவைகளை வழங்கவேண்டிய அவசியமுள்ளதாக மேலும் அவர் தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Standard protocol needed for affordable insurance products: Irda

Absence of a standard protocol for treatment has led to lack of uniformity in cost of treatments and there is a need to make affordable insurance products.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X