காச எடுக்க காசு கொடுக்கனுமா?? மக்கள் ரொம்ப பாவம்...

மும்பை: பொங்களூரு ஏடிஎம் விபத்து பிறகு, ஏடிஎம்களில் பலத்த பாதுகாப்பை ஏற்படுத்த உத்தரவிடப்பட்டது. இந்த பாதுகாப்புக் காரணங்களுக்காக செய்யப்படும் செலவுகளை கருத்தில் கொண்டு ஏடிஎம்-களில் பணம் எடுக்க அல்லது விவரமறிய ஒரு கட்டணத்தை வசூலிக்க வங்கிகள் பரிசீலிப்பதாகத் தெரிகிறது.

பல்வேறு மாநில காவல் துறையின் வீடியோ கேமராவை ஏடிஎம்-களில் உள்ளும் வெளியிலும் வைப்பது அந்த பதிவுகளை 6 மாதங்கள் வரை பத்திரப்படுத்துவது உள்ளிட்ட நிர்பந்தங்கள், செலவுகளை இரட்டிப்பாக்கியுள்ளதாக வங்கிகள் தெரிவித்துள்ளன. நாட்டில் உள்ள ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஏடிஎம்-களில் அரிதாகவே முழுநேர காவலோ அல்லது வீடியோ கேமராவோ உள்ளது.

தற்போது அனைத்து ஏடிஎம் சேவைகளும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாகவே தரப்படுகின்றன. பிற வங்கி ஏடிஎம்களில் செய்யப்படும் பரிவர்த்தனைகளில் மாதத்திற்கு 5 பரிவர்த்தனைகள் மட்டும் இலவசமாக உள்ளது.

"பயிற்சி பெற்ற காவலாளிகளை மூன்று சுழற்சிகளில் நியமிப்பது, ஆயுதங்கள் மற்றும் உரிமங்களை வாங்குவது, கேமராக்களை ஏடிஎம்-களின் உள்ளே மற்றும் வெளியே அமைப்பது மற்றும் அருகிலுள்ள காவல் நிலையம் வரை அபாய மணி இணைப்பது முதலான செலவுகள் வங்கிகளுக்கு கடும் நெருக்கடியை தருகின்றன" என்று ஒரு மூத்த அரசு வங்கி அதிகாரி தெரிவித்தார்.

கட்டணத்திற்கான பேச்சுவார்த்தைகள்

கட்டணத்திற்கான பேச்சுவார்த்தைகள்

பாதுகாப்பை அதிகரிப்பது தொடர்பான கூடுதல் கட்டணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித்து விவாதிக்க இந்திய வங்கிகள் சங்கத்திடம் அனைத்து வங்கிகளும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளன.

வேலை நேரங்கள்

வேலை நேரங்கள்

செலவினங்களை குறைக்க, குறைந்த உபயோகமுள்ள பகுதிகளில் அல்லது இரவு நேரம் தேவைப்படாத இடங்களில் உள்ள ஏடிஎம்-களில் வேலை நேரங்களை நிர்ணயிக்கவும் அதாவது காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை, ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது.

கால அவகாசம் தேவை

கால அவகாசம் தேவை

"நாங்கள் நடைமுறைகள் குறித்து இந்திய வங்கிகள் சங்கத்துடன் செயலாற்றி வருகிறோம். இதில் முடிவுகளை எடுப்பதற்குமுன் போட்டி மற்றும் ஏடிஎம் களின் பரவல் ஆகியவை மனதில் கொள்ள வேண்டியிருப்பதால் சில சிக்கல்கள் உள்ளன" என்று கனரா வங்கியின் தலைமை பொது மேலாளர் ஆர் .ஆர் ஷர்மா, பிசினஸ் லைன் இதழுக்கு அளித்த பேட்டியின்போது தெரிவித்தார்.

ஒரு பரிவர்த்தனைக்கு 6 ரூபாய்..

ஒரு பரிவர்த்தனைக்கு 6 ரூபாய்..

முதலில் கிடைத்துள்ள தகவல்களின் படி, சராசரியாக 200 பரிவர்த்தனைகள், ஒரு லட்சம் ஏடிஎம்கள் என்ற அடிப்படையில் ஒருமுறை சேவையை உபயோகிக்க 6 ரூபாய் செலவாகிறது என்று ஷர்மா தெரிவித்தார். எனினும், தனிப்பட்ட முறையில் ஓவ்வொரு வங்கியின் செலவு முறைகளும் வேறுபடும்.

பெரும் சுமை

பெரும் சுமை

ஒரு லட்சம் ஏடிஎம்-கள் என்பது, ஒரு நாளைக்கு இரண்டு கோடி பரிவர்த்தனைகளும், ஒரு மாதத்திற்கு அறுபது கோடி பரிவர்த்தனைகளையும் கொண்டிருப்பதால், இது வங்கிகளை கவலையடையச் செய்துள்ளது.

ரூ360 கோடி செலவு

ரூ360 கோடி செலவு

எனவே, ஒரு பரிவர்த்தனைக்கு, ரூபாய் ஆறு செலவு பிடிக்கும் என்றால் இது ஒரு மாதத்திற்கு 360 கோடி ரூபாய் செலவு பிடிக்கும். இந்த திட்டம் நிறைவேறுமானால், அந்த செலவை வாடிக்கையாளர்களே சுமக்க வேண்டியிருக்கும்.

முடிவுகட்டும் செயல்

முடிவுகட்டும் செயல்

கட்டணத்தை வசூலிப்பது என்பது இலவச ஏடிஎம் சேவைகளை முடிவுக்குக் கொண்டுவரும் செயல்.

பிற வங்கி ஏடிஎம்..

பிற வங்கி ஏடிஎம்..

"ஏற்கனவே மாதத்திற்கு 5 முறை மட்டுமே பிறவங்கி ஏடிஎம்-களை கட்டணமின்றி பயன்படுத்த முடியும். இதுவே ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல என்கிறபோது, பின் எவ்வாறு பாதுகப்பு செலவுகளை வாடிக்கையாளர்கள் மீது சுமத்த முடியும்?" என்று ஒரு வாடிக்கையாளரான பநீந்ரா கேள்வி எழுப்பினார்.

ஆபிஐயின் முடிவு???

ஆபிஐயின் முடிவு???

எனினும் இக்கட்டணத்தை வசூலிக்க ஆர்பிஐ அனுமதி வழங்கும் என்று வங்கிகள் நம்புகின்றன.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+