ஆமை வேகத் திட்டங்களால் அரசுக்கு 1.74 லட்சம் கோடி ரூபாய் நஷ்டம்!!!..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: அரசின் பல்வேறு பல்வேறு திட்டங்கள் கிடப்பில் உள்ளது, இது தொடர்பாக முதலீடுகளுக்கான அமைச்சரவை குழு மூலமாக துரிதப்படுத்த முயற்சித்து 150 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள சுமார் 301 மத்திய திட்டங்களில் தாமதத்தின் காரணமாக 1.74 லட்சம் கோடி ரூபாய் வரை அரசுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

"2013 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை நடப்பில் இருக்கும் சுமார் 738 மத்திய திட்டங்களில் 301 திட்டங்கள் இலக்கைதாண்டி தாமதமாகியுள்ளன" என புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கங்க துறை இணை அமைச்சர் திரு ஸ்ரீகாந்த் ஜேனா, மாநிலங்களவையில் எழுத்து மூலமான பதிலில் தெரிவித்துள்ளார். இந்த மொத்த திட்டங்களின் உண்மையான மதிப்பீடு 9,04,955.18 கோடி ரூபாயாகும். இவை முடியும் தருவாயில் இவைகளின் மொத்த மதிப்பு 10,78,958.46 கோடி ரூபாய்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆமை வேகத் திட்டங்களால் அரசுக்கு 1.74 லட்சம் கோடி ரூபாய் நஷ்டம்!!!..

எனவே உண்மையான மதிப்பீடுகளை ஒப்பிடுகையில் இந்த திட்டங்களை செயல்படுத்த்த இன்னும் 1,74,033.18 கோடி ரூபாய் அதிகம் தேவைப்படும் என்று அவர் தெரிவித்தார். "சட்ட சிக்கல்கள், நிலம் கையகப்படுத்துதலில் ஏற்படும் தாமதங்கள், மீட்பு மற்றும் மறுகுடியமர்வுப் பணிகள், நிதி நெருக்கடிகள், வன மற்றும் சுற்றுசூழல் அனுமதிகள், பாதை மற்றும் பயன்பாட்டு உரிமை சிக்கல்கள், திட்டப் பொருட்களைப் பெறுவதில் ஏற்படும் தாமதங்கள் மற்றும் ஒப்பந்த சிக்கல்கள் ஆகியவை திட்டங்கள் தாமாதமாக முக்கிய காரணமாக உள்ளன" என அமைச்சர் தெரிவித்த்தார்.

ரூ.150 கோடிக்கும் அதிக மதிப்புள்ள முக்கிய மத்திய திட்டங்களின் செயலாக்கத்‌தைக் கண்காணிக்கும் பொறுப்பு புள்ளியியல் மற்றும் திட்டங்கள் அமலாக்கத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தீவிர திட்ட ஆய்வுகள், இணைய கண்காணிப்பு அமைப்பு, அமைச்சகத்தில் கால மற்றும் செலவின அதிகரிப்பபிற்கான பொறுப்புகளை நியமிக்கக் குழுக்களை அமைத்தல் மற்றும் முதலீட்டுக்கான அமைச்சரவை குழுவை நியமித்தல் ஆகிய முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அமைச்சரவை தலைமை செயலகத்தில் பிரதமர் தலைமையிலும் மேலும் திட்ட கண்காணிப்பு சிறப்புக் குழுவின் துணையுடனும், முதலீடுகளுக்கான அமைச்சரவைக் குழு இதுவரை சுமார் 3.86 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. நிதியமைச்சர் ப சிதம்பரம் முதலீடுகளுக்கான அமைச்சரவைக் குழு மூலம் திட்டங்களுக்கான துரித அனுமதிகள் கிடைக்கச்செய்வதன் மூலம் பொருளாதாரத்த்தில் முதலீடுகளை திறக்கச் செய்யமுடியும் என்று நம்புவதாகத் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Delay in 301 projects to cost R1.74 lakh cr more: Mospi

Government tries to expedite project clearances through the Cabinet Committee on Investment (CCI), as many as 301 central sector projects are delayed resulting in cost overruns of Rs 1.74 lakh crore.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X