மும்பை: ஐந்து வருடங்களுக்கு முன் வெறும் ரூ1500க்கு இந்திய நிறுவனத்தின் சீனா தயாரிப்பு மொபைல்களை முதன் முதலில் அறிமுகப்படுத்தி புரட்சி செய்தது மைக்ரோமேக்ஸ். தற்போது இந்தியாவின் 2வது மிகச்சிறந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமாக மைக்ரோமேக்ஸ் உருவெடுத்துள்ளது. மேலும் இந்நிறுவனம் இந்தியா மட்டும் அல்லாது பன்னாட்டு வர்த்தகத்தையும், மேல்நிலை சந்தைகளையும் பிடிக்க திட்டமிட்டுள்ளது.
பங்கு சந்தையில் பட்டியலிடப்படாத இந்த நிறுவனம் கடந்த ஜூலை-செப்டம்பர் வரையிலான காலாண்டில் 22 லட்சம் ஸ்மார்ட் போன்கள் உள்ளிட்ட 68 லட்சம் போன்களை விற்றுள்ளது, நடப்பாண்டில் சுமார் 600 கோடி ரூபாய் மதிப்பிலான விற்பனையை அடைந்து தனது போட்டி நிறுவனங்களை கதி கலங்க வைத்துள்ளது.
சாதாரண மொபைல்கள் ஆதிக்கம் செலுத்தும் விலையையொட்டி இயங்கும் சந்தையில், மிகுந்த விளம்பரங்களுடனும், கூகுளின் ஆண்ட்ராய்டு மென்பொருள் அம்சங்களுடனும், சாம்சங் போன்களுக்கு இணையான, அதேநேரம் பாதி விலையில் அதாவது ரூபாய் மூவாயிரத்திலிருந்து உருவாக்கப்பட்டுள்ள மைக்ரோமேக்ஸ் ஸ்மார்ட் போன்கள் பெருமளவிலான மக்களை ஈர்த்துள்ளது.
அனைத்து போன்களை ஒப்பிடுகையில், நோக்கியா மற்றும் சாம்சங்கிற்கு அடுத்தபடியாக மைக்ரோமேக்ஸ் மூன்றாவது இடத்தில் உள்ளது.
மக்களை கவர்ந்த மைக்ரோமேக்ஸ்
தகவல் தொழில்நுட்ப மென்பொருள் மற்றும் தொலைத்தொடர்பு சாதனங்கள் விற்பனையில் ஈடுபட்டிருந்த இந்த நிறுவனம் விலை மலிவான பெரிய திரை உள்ள மேலும் இரண்டு சிம் கார்டுகளை உபயோகிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட போன்களை விற்பனைக்கு கொண்டுவந்து வாடிக்கையாளர்கள் பிற போன்களை ஒப்பிடும்போது சாதகமான அம்சங்களை பெறவைத்தது.
ஸ்மார்ட்போன்
ப்ராண்ட் சிந்தனையுள்ள அதிகம் செலவழிக்கும் சக்தியுள்ள இந்தியர்களிடையே சந்தையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ள மைக்ரோமேக்ஸ், கடந்த அக்டோபர் மாதம் ரூபாய் 19,000 மதிப்புள்ள பேப்லெட் எனப்படும் அதிக பயன்பாடுள்ள பெரிய 5 இன்ச் திரையுள்ள போன்களை அறிமுகப்படுதியது.
விளம்பர யுத்தி!!..
பொதுவாக கிரிகெட் வீரர்கள் மற்றும் பாலிவுட் நடிகர்களை வைத்து விளம்பரப்படுத்தும் நிலையில், சற்று வித்தியாசமாக ஹாலிவூட் நடிகரான வோல்வேரைன் புகழ் ஹக் ஜாக்மனை வைத்து விளம்பரப்படுத்தியது.
உலக சந்தை!!!..
2014ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ரஷ்யாவில் விற்பனையை துவக்கவுள்ள மைக்ரோமேக்ஸ் அடுத்து சாம்சங் மற்றும் நோக்கியாவிற்கு போட்டியாக ரோமானியாவிலும் விற்பனையை துவங்கவுள்ளது. இங்கிலாந்தின் ப்ளை மொபைல்சும் சீன தயாரிப்பு மொபைல்களை ரஷ்யா மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் விற்பனை செய்கிறது.
பயனளிக்காத முயற்சிகள்
மைக்ரோமேக்ஸ் பிரேசில் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும் அடிப்படை வகை போன்ககளை சந்தைப்படுத்த எடுத்த முயற்சிகள் பலனளிக்காததால் முயற்சிகளை கைவிட்டது.
வெற்றி வாய்ப்புகள் அதிகம்..
சந்தை வல்லுனர்கள் இந்நிறுவனத்தை பற்றி கூறுகையில் "டி ஏ அசோசியெட்ஸ் செக்யோயியா காபிடல் ஆகிய தனியார் முதலீடுகளால் நடத்தப்படும் மைக்ரோமேக்ஸ், பன்னாட்டு பிராண்டுகள் ஆதிக்கம் செலுத்தும் விலை அதிகமுள்ள துறைகளில் நுழைவதற்கான திட்டங்களை வகுப்பதோடு, புதிய சந்தைகளில் தன்னுடைய பிராண்டை அடிப்படையிலிருந்து துவக்க திட்டமிட்டுள்ளது. மேலும் இத்திட்டம் 70% வெற்றி அடைய வாய்ப்புள்ளது" எனத் தெரிவித்துள்ளனர்.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications