10,000 கோடி முதலீட்டை திரட்டும் பணியில் எஸ்பிஐ வங்கி தீவிரம்!!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

10,000 கோடி முதலீட்டை திரட்டும் பணியில் எஸ்பிஐ வங்கி தீவிரம்!!!
மும்பை: எஸ்பிஐ வங்கியின் நிதிநிலையை சரிசெய்யவும், முதலீட்டை அதிகப்படுத்தவும் சுமார் ரூ.9,576 கோடியை மதிப்புடைய பங்குகளை விற்க திட்டமிட்டுள்ளது. இந்த பங்கு விற்பனையை வெற்றிகரமாக முடிக்க சிட்டி குரூப், டாய்ச்சிஸ் பேங்க் மற்றும் ஹெஎஸ்பிசி ஹோல்டிங்க்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் ஸ்டேட் வங்கி இணைந்துள்ளது.

ஜேபி மோர்கன் சேஸ், பேங்க் ஆப் அமெரிக்கா, மற்றும் யுபிஎஸ் ஆகிய நிறுவனங்களும் இதற்காக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடாத வரை இதை வெளியிட வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதலில் அமைப்புசார் முதலீட்டாளர்களுக்கு பங்குகளை அவ்வங்கி விற்கும் என்றும் தெரிகிறது.

 

இவ்வரசு வங்கி தன்னுடைய முதலீட்டுத் தேவைகளை பசேல்-III விதிமுறைகள் படி பூர்த்திசெய்ய சுமார் 1.20 லட்சம் கோடி ரூபாய்களை 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் திரட்டவேண்டியுள்ளது. இது குறித்து ஆவங்கியின் முதன்மை நிதி அதிகாரி திவாகர் குப்தா தெரிவிக்கையில், பரிமாற்றப் பதிவுகள் படி செப்டம்பர் 2012 வரை, எஸ்பிஐ போதிய முதல் இருப்பு விகிதமாக 12.09 விழுக்காட்டை கொண்டிருந்தாகத் தெரிவித்தார்.

 

இவ்வங்கி மேலும் ரூபாய் 2,000 கோடி மதிப்புள்ள பங்குகளை அரசிற்கு விற்க உள்ளது. அரசு இவ்வங்கியின் 62.3 விழுக்காடு முதலீட்டை கொண்டிருக்கிறது, இந்த பங்கின் விலை ரூ.1782.74 என்ற விலையில் ஸ்டேட் விங்கி விற்கும். இது குறித்து வங்கி தகவல் தொடர்பு அலுவலர் எம். ஆர்.ரேகி இதுகுறித்து இதுகுறித்து எதுவும் பதிலளிக்கவில்லை.

பதிவு விவரங்கள் படி, அவ்வங்கி முதலீட்டை திரட்டும்போது அதில் அரசின் முதலீடு 58 விழுக்காட்டிற்கு குறைவாக இருக்கலாகாது என்ற நிபந்தனையுடன் அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SBI hires Citi, HSBC for share sale

State Bank of India (SBI), hired Citigroup Inc., Deutsche Bank AG and HSBC Holdings Plc. to arrange a Rs.9,576 crore share sale to bolster its balance sheet.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X