மின் உற்பத்தியை அதிகரிக்க அதிக முதலீடு தேவை!!! டாடா பவர்...

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்திய நாட்டின் மிகப் பெரிய மின் உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனமான டாடா பவர் நிறுவனம் விரிவு படுத்தும் செயலில் ஈடுபட்டுள்ளது. இதற்காக ரூ.5000 கோடியை திரட்ட வெவ்வேறு வழிகளை கண்டறிந்து வருகிறது. இதை அடுத்த மூன்று ஆண்டுகளில் நிறைவேற்ற முற்பட்டுள்ளது.

8,500 மெகா வாட் அளவு மின் உற்பத்தி திறன் கொண்ட டாடா பவர், வியட்னாம் மற்றும் ஜோர்ஜியா நாடுளிலும் தனது உற்பத்தி நிலையங்களை உருவாக்குவது உட்பட பல துடிப்பான விரிவாக்கும் திட்டங்களில் கவனம் செலுத்தி வருகிறது. இதற்கான நிதியை திரட்ட அதற்கு சாதகமான வாய்ப்புக்களை ஆராய்ந்து வருகின்றது.

'எது முடியும், எது முடியாது என எல்லா விஷயங்களையும் ஆராயந்து வருகிறோம், ஆனால் நாங்கள் இன்னும் ஒரு தீர்மானத்திற்கு வரவில்லை.' என்று டாடா பவர் நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகள்கூறியுள்ளனர்.

மின் உற்பத்தியை அதிகரிக்க அதிக முதலீடு தேவை!!! டாடா பவர்...

அடுத்த மூன்று ஆண்டுகளில் ஏறத்தாழ ரூ.4,000-5,000 கோடி வரை நிர்வாகத்திற்கு நிதி தேவைப்படும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு பதில் அளித்த நிர்வாகம் அனைத்து வழிகளையும் கலந்தாய்ந்து வருவதாகவும், பங்குகளை விற்பதும் ஒரு நல்ல வழியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

எந்த ஒரு விவரங்களையும் கொடுக்காமல் டாடா பவர் அதன் ஆய்வாளர்களை நிதியை திரட்டும் வழிகளை கண்டறிய செய்துள்ளது. 'இதில் கடன் நிதியும் அடங்கும். ஆனால் தற்போதைய நிலையில் தேதியின் அடிப்படையில் நாம் மிகவும் நீட்டிப்பு அடைந்துள்ளோம்' ஏன்றும் தெரிவித்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் வரை நிறுவனத்தின் நீண்ட கால கடன்களின் மதிப்பு ரூ.32,842.24 கோடியாக இருந்தது. 'எங்களது வாடிக்கையாளர்கள் சரியான நேரத்தில் எங்களுக்கு பணத்தை செலுத்தினால், இன்றைய தேதியின் கணக்குப் படி அடுத்த ஆண்டின் முதல் மூன்று மாதங்கள் வரை எங்களுக்கு தேவையான நிதி உள்ளது' என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் மாதத்துடன், நடப்பு நிதியாண்டின் ஆறு மாதங்கள் முடிவடைந்த நிலையில் நிறுவனத்தின் மொத்த இழப்பு ரூ.39.73 கோடியாகும். ஒரு வருடத்திற்கு முன்பாக அதன் மொத்த வருவாய் ரூ.62.13 கோடியாகும். இந்த கணக்குகள் அனைத்தும் வரி, வட்டி மற்றும் பங்காளர்களின் லாபத்தை கழித்த பின் எடுத்த கணக்காகும்.

செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த ஆறு மாதங்களில் டாடா பவர் நிறுவனம் 22,738 மில்லியன் யூனிட் மின் உற்பத்தி செய்துள்ளது. இது கடந்த ஆண்டின் 14,029 மில்லியன் யூனிட்களை விட மிகவும் அதிகமாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tata Power plans to raise up to Rs 5,000 crore in next 3 yrs

The country's largest private power producer Tata Power is exploring various options to raise around Rs 5,000 crore in the next three years.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X