டெல்லி: இந்தியாவில் குறைந்த கட்டணத்தில் விமானங்களை சேவையை வழங்கும் இண்டிகோ நிறுவனம் உள்நாட்டு பயணத்திற்காக 10 புதிய விமானங்களை கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று தொடங்கியது. நாட்டின் பெரிய விமான சேவையை அளிக்கும் இந்நிறுவனம் சென்னையிலிருந்து ஐதராபாத்திற்கு ஐந்தாவது வழிநில்லா விமானத்தை இயக்குகிறது.
சென்னையிலிருந்து கொல்கத்தாவிற்கு நான்காவது வழிநில்லா விமானத்தையும் மற்றும் ஐதராபாத்திலிருந்து சென்னைக்கும், கோவாவிற்கும் தினமும் வழிநில்லா விமானங்களையும் இயக்கி வருகிறது. மேலும், 6E விமானம் சென்னையிலிருந்து கோவா வரை (ஐதராபாத் வழியாக) இயங்கி வருகிறது.

ஒரு பேட்டியின் போது டெல்லியிலிருந்து பெங்களுருக்கு தினமும் ஒன்பதாவது வழிநில்லா விமானத்தையும் தில்லியிலிருந்து கோவாவிற்கு தினமும் மூன்றாவது வழிநில்லா விமானத்தையும் டிசம்பர் 22 முதல் இயக்கவிருப்பதாக இந்நிறுவனம் தெரிவித்தது. இந்த புதிய விமானங்கள் மேற்கூறிய தடங்களில் அகிகமாக இயக்கப்டுவதால் வாடிக்கையாளர்கள் பயனடைவார்கள் என்று கூறியது.
நாட்டின் 36 முக்கிய இடங்களை 459 விமானங்கள் மூலம் இணைக்கும் இந்நிறுவனத்தால், இப்பொழுது தொடங்கப்பட்டிருக்கும் இந்த புதிய விமானங்கள் இண்டிகோ நிறுவனம் நாட்டின் அதிவேக விமான சேவையை தரும் நிறுவனமாக உருமாறும் என்றும், 6 கோடி பேர் பயணம் செய்த தங்கள் விமானங்கள் வழியாக தங்களுக்கு மக்களின் மகத்கான ஆதரவுவும் ஊக்கமும் இருப்பதாக அந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆதித்யா கோஷ் தெரிவித்தார்
சென்னையில் இருந்து ஹைதெராபாத் செல்வதற்கு இண்டிகோ நிறுவனம் வெறும் ரூ.2,300 மட்டுமே பெறுகிறது.


Click it and Unblock the Notifications