மும்பை: மத்திய ரிசர்வ் வங்கி பெரும் பணவீக்கத்தோடு போராடிவரும் நிலையில், வங்கிகளுக்கும் அளிக்கும் கடன்களின் மீதான வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்த திட்டமிட்டுள்ளது. இந்து உயர்வு தவிர்க்க முடியாத ஒன்றாகத் தோன்றுகிறது என ரிசர்வ் வங்கியின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால் அடுத்த வாரத்திற்குள் கண்டிப்பாக வட்டி விகித உயர்வை எதிர்பார்க்கலாம்.
ஒரு பக்கம் ஓய்வு பெற்றவர்களுக்கு அதிக வட்டி கிடைப்பதால் அவர்களுக்கு நல்ல செய்தி என்றாலும், கடன் வாங்கியவர்களுக்கு இது ஒரு இடி தான். முக்கியமாக வீட்டுக் கடன்கள் உயருவதோடு பிறகடன்களும் வட்டி உயர்வுக்கு விதிவிலக்கல்ல.
டிசம்பர் 18 ஆம் தேதி கூடவுள்ள ரிசர்வ் வங்கி அதிகாரிகள் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தும் வழிவகைகளை பற்றி ஆராய உள்ளனர். இந்த உயர்வு, வங்கி வைப்புகளின் மீது வழங்கும் மற்றும் கடன்களின் மீது விதிக்கும் வட்டிவிகித உயர்வுகளைக் குறிக்கிறது.

ரிசர்வ் வங்கியின் ஒட்டுமொத்த ஒரே குறிக்கோள் பணவீக்கத்தை எப்பாடுபட்டேனும் கட்டுப்படுத்துவதாகும். கடந்த அக்டோபர் மாதத்தில் பணவீக்கம் 11.24 விழுக்காடாக உயர்ந்து வர்த்தக மற்றும் பொருளாதார வல்லுநர்களை ஆச்சர்யமும் அதிர்ச்சியும் அடைய வைத்தது.
"பணவீக்கத்தின் தற்போதய நிலையை பொறுத்தவரை, சற்று சவுகரியமாக இல்லை, இதை 10.09 விழுக்காடாக முன்னர் இருந்தபோது கூறியது போல், தற்போது 11 ஐ தாண்டி இருக்கும்போதும் கூறுகிறேன்" என ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் ரிசர்வ் வங்கியின் தலைமை குழு கூட்டத்திற்கு பிறகு ஏற்பாடு செய்ய்யப்பட்டிருந்த சந்திப்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
நடப்பாண்டில் முதல் இரண்டு காலாண்டுகளில் ஏற்பட்ட 5 விழுக்காட்டிற்கும் குறைவான வளர்ச்சி இதற்கு காரணமாக இருந்திருக்கலாம் என்றாலும், ரிசர்வ் வங்கி மிகவும் கவனத்துடன் இந்த பணவீக்கம் மற்றும் வளர்ச்சி குறைவை கண்காணிக்கும்.
தெளிவாகக் கூற வேண்டும் என்றால், சேமிப்போர் இன்னும் சில வாரங்கள் பொறுத்திருந்தால் அவர்களின் சேமிப்பு அல்லது வைப்புகளுக்கு நல்ல வட்டி விகிதங்கள் கிடைக்கலாம். அதேநேரம் கடன் வாங்கியோர் தங்கள் மாதாந்திர தவணைகள் உயரக் காணலாம். தவிர்க்க முடியாத காரணங்களைத் தவிர, தற்போது வேறு எந்த காரணத்திற்காகவும் கடன் வாங்குவது உகந்ததல்ல.


Click it and Unblock the Notifications