கிரிக்கெட் சங்கங்களின் மூலம் அரசுக்கு 38கோடி ரூபாய் வரி நட்டம்!!!...

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: பிசிசிஐயிடமிருந்து நான்கு கிரிக்கெட் அசோஸியேஷன்களுக்கு வழங்கப்பட்டுள்ள டிவி உரிமங்களுக்கு ஒழுங்கற்ற வரி விலக்குகளை, வருமான வரித்துறை அளித்துள்ளதனால், சுமார் 37.23 கோடி ரூபாய் அளவிலான வரி வசூலிக்கப்படவில்லை என்று கம்ப்ட்ரோலர் அண்ட் ஆடிட்டர் ஜெனரல் (சிஏஜி) இன்று தெரிவித்துள்ளது.

 

"பிசிசிஐயிடமிருந்து பெறப்பட்ட டிவி உரிமங்களின் வாயிலாக சோராஸ்டிரா கிரிக்கெட் அசோஸியேஷன், பரோடா கிரிக்கெட் அசோஸியேஷன், கேரளா கிரிக்கெட் அசோஸியேஷன் மற்றும் மஹாராஷ்டிரா கிரிக்கெட் அசோஸியேஷன் உள்ளிட்ட நான்கு கிரிக்கெட் அசோஸியேஷன்களுக்கு கிடைத்துள்ள வருமானத்துக்கு வருமான வரித்துறை முறையில்லாத வரிவிலக்கு அளித்துள்ளதனால் சுமார் 37.23 கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்பட்டுள்ளது," என்று சட்டசபையில் சமர்ப்பிக்கப்பட்டதொரு அறிக்கையில் அது குறிப்பிட்டுள்ளது.

கிரிக்கெட் சங்கங்களின் மூலம் அரசுக்கு 38கோடி ரூபாய் வரி நட்டம்!!!...

வருமான வரிச் சட்டத்தின் செக்க்ஷன் 2 (15) -இன் கீழ், வர்த்தகம், வாணிகம் அல்லது வியாபாரம் சார்ந்த தன்மையுடைய எந்த ஒரு பொது பயன்பாட்டு நடவடிக்கையை மேற்கொள்வதும் "தர்ம காரியமாக" கருதப்படமாட்டாது என்று சிஏஜி கூறியுள்ளது.

சோராஸ்டிரா கிரிக்கெட் அசோஸியேஷன் பற்றிக் கூறுகையில், கடந்த மூன்றாண்டுகளில் சுமார் 35கோடி ரூபாயை டிவி சந்தாவாக வசூலித்திருப்பதாகவும், இதிலிருந்து மிகக் குறைந்த அளவே இவ்விளையாட்டின் மேம்பாட்டிற்கும், அதன் வளர்ச்சிக்கும் உபயோகிக்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 19.44 கோடி ரூபாய் வரை குவிக்கப்பட்டுள்ளதாகவும் சிஏஜி தெரிவித்துள்ளது.

"இதனால் 19.44 கோடி ரூபாய் கணக்கில் எடுக்கப்படாமல், அரசுக்கு 8.45 கோடி ரூபாய் அளவிலான வரி இழப்பு ஏற்பட்டுள்ளது" என்று அது கூறியுள்ளது.

மற்றொரு சம்பவத்தை குறிப்பிட்டுப் பேசிய அதிகாரப்பூர்வ ஆடிட்டர், வருமான வரித் துறை 30 டிரஸ்ட்களுக்கு ஒழுங்கற்ற வரி விலக்குகளை அனுமதித்துள்ளதனால் எவ்வித குறிப்பிட்ட வழிகாட்டுதல்களுமின்றி பெறப்பட்ட வாலன்டரி கான்ட்ரிபியூஷன்கள், நிகர வருமானமாகக் கருதப்படாமல் கார்ப்பஸ் ஃபண்டுக்குள் கொண்டு செல்லப்பட்டு சுமார் 59.61 கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்படச் செய்துள்ளது என்று கூறியுள்ளார்.

 

"ஏஓக்கள் (அசெஸ்ஸிங் அதிகாரிகள்), எவ்வித குறிப்பிட்ட வழிகாட்டுதல்களுமின்றி பெறப்பட்ட வாலன்டரி கான்ட்ரிபியூஷன்கள் கார்ப்பஸ் ஃபண்ட் வருமானமாகக் கருதப்படுவதற்கு, சுமார் 30 அசெஸ்ஸீக்களுக்கு அனுமதி அளித்துள்ளதை நாங்கள் கண்டு கொண்டோம். இது சுமார் 59.61 கோடி ரூபாய் வரையிலான வரி இழப்பை ஏற்படுத்தியுள்ளது," என்று அது கூறியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Irregular tax exemptions given to cricket associations: CAG

The Income-tax Department has allowed irregular exemptions on TV rights from BCCI to four cricket associations resulting in non-levy of tax to the tune of Rs 37.23 crore.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X