மும்பை: ஸ்மார்ட்போன்கள் வந்த பின்னர், அதன் பயன்பாடு மக்களிடையே கடந்த வருடத்தை விட இந்த வருடம் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. மேலும் ஸ்மார்ட்போன் மொபைல் பயன்படுத்துபவர்கள் அதிக அளவில் இன்டர்நெட் பயன்படுத்துகின்றனர். இதனால் மொபைல் டேட்டா பயன்பாடு 220 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளதாக பாரதி ஏர்டெல் நிறுவனம் கூறியுள்ளது. "போன் இல்லாமல் நான் இல்லை, நான் இல்லாமல் போன் இல்லை" என்ற அளவுக்கு மொபைல் போன்களின் அதிக்கம் மக்களிடம் அதிகரித்துள்ளது. மேலும் இந்த வருடம் பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் லாபம் பெருவாரியாக உயர்ந்துள்ளது.
மொபிடியூட் 2013 என்ற அந்நிறுவனத்தின் கணக்கெடுப்பின் மூலமாக மொபைல் போன்கள் பயன்படுத்துவோரின் விருப்பங்கள் பதிவு செய்யப்பட்டன. இதன் மூலம் 87 சதவிகித பயன்பாடு 3G வசதியுள்ள கருவிகள் மூலம் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது. குறிப்பிட்ட பயன்பாட்டில், கூகுள் இணையதளம் தொடர்ந்து முன்னணியில் இருப்பதுடன், யூடியுப் மற்றும் பேஸ்புக் ஆகியவை அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

ஸ்மார்ட் போன் பயன்பாடுகளை பொருத்தவரை இந்த கணக்கெடுப்பில், உபயோகிப்பாளர்கள் தாராளமான திரைகளைக் கொண்ட போன்களை விரும்புகின்றனர். 5.5 அங்குலத்திற்கும் அதிகமான திரையுள்ள போன்களின் பயன்பாடு 123 சதவிகிதம் வளர்ச்சியும் 3.5 அங்குலம் வரை திரை கொண்ட போன்கள் 30 சதவிகித வளர்ச்சியும் அடைந்துள்ளன.
மொபைல் டிவி 400 சதவிகித வளர்ச்சி கண்டு மிகவும் விரும்பத்தக்க சேவையாகவும் அதனை தொடர்ந்து ஹலோ டியூன்ஸ், ஏர்டெல் ரேடியோ மற்றும் கரோக்கே ஆகியன விரும்பத்தக்க சேவைகளாகவும் இருந்தன.
பாரதி ஏர்டெல் நிறுவனத்தின் தலைமை சந்தையிடுதல் அதிகாரி (நுகர்வோர் வர்த்தகம்) கோவிந்த் ராஜன் கூறுகையில் "மொபைல் போன்கள் அனைத்து வயதினருக்கும் மற்றும் பகுதியினருக்கும் தேவைக்கேற்ற வகையில் இன்றியமையாத 24 மணி நேர துணையாக உள்ளது. மொபிடியூட்2013 கணக்கெடுப்பு உபயோகிப்பாளர்களின் இந்த போக்கை பதிவு செய்வதோடு அவர்களுடைய விருப்பங்களையும் உபயோக வழக்கங்களையும் பற்றிய உண்மையான நிலவரத்தை வெளிக்கொணர்கிறது. இந்த முயற்சி சுமார் 19.4 கோடி மக்கள் ஆர்வமுடன் தங்களின் விருப்பங்களை பதிவு செய்தனர்" என்றார்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications