பெங்களூரு: இந்தியாவில் இரண்டாவது மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்ஃபோசிஸ், அடுத்த ஆண்டில் 16,000 பொறியாளர்களை பணியமர்த்தும் என அந்நிறுவனத்தின் சேர்மன் என்.ஆர். நாராயன மூர்த்தி தெரிவித்தார்.
"அடுத்த ஆண்டிற்கான பணியமர்த்தும் செயல்பாடு ஏற்கனவே துவங்கியுள்ள நிலையில், சுமார் 15,000-16,000 பொறியாளர்களை பணியமர்த்தம் செய்வோம், அதற்கான செயல்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன" என மூர்த்தி ஒரு நிகழ்ச்சியின் போது தெரிவித்தார்.
108 பில்லியன் டாலர் இந்திய ஐடி துறை வருவாயில் 80 சதவிகிதம் கணக்கிடப்படும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா சந்தைகளில், அவுட்சோர்சிங் சேவைத் தேவையை மேம்படுத்தும் பொருட்டு, கடந்த சில வருடங்களை விட, வரவிருக்கும் நிதியாண்டு ஆட்சேர்ப்பு மிக சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சில பிரச்சனைகள் குறித்து பேசிய மூர்த்தி அவர்கள், நாட்டில் உள்ள மக்கள் முன்னேற்றத்திற்காக மிக உறுதியான நடவடிக்கைகள் எடுப்பது அவசியம் எனவும் தெரிவித்தார்.
உண்மையான வார்த்தைகள்
"இந்தியா ஒரு வெற்று வார்த்தை பேசும் நாடே தவிர செயல்பாடு இல்லை. ‘மெரா பாரத் மகான்' என்ற கோசம் நமக்கு உதவிசெய்யாது." என திரு.மூர்த்தி வலியுறுத்தினார்.
இனைஞர்களுக்கு அறிவுறை
புதிய கருத்துகளை முன்வைக்க வேண்டும், மாறாக நம்பிக்கையற்றவர்களாக இருக்க கூடாது என அவர் மாணவர்களுக்கு ஊக்கமளித்தார். "அக்கறையற்ற தன்மையைத் தவிர்த்து செயல்பாட்டில் இறங்க வேண்டும். உன்னை விடவும் சிறப்பாக வரவேண்டும் என்பதை குறிகோளாக வைத்துக்கொள். தயாராக இருப்பவர்களுக்கு அதிஷ்டம் சாதகமாக அமையும்".
இந்திய பொருளாதார நிலை
நாட்டின் பொருளாதார நிலைமை பற்றி பேசுகையில், பொருளாதாரத்தில் மாற்றம் ஏற்பட்டு முன்னோக்கி செல்கிறது எனக் கூறினார். "அரசு வணிக வளர்ச்சியை நாட்டில் ஏற்படுத்தும் வரை, நாம் அதிக வரி சேகரிக்கும் வரை, அந்த வரித்தொகையை சிறப்பாக செயல்படுத்தும் போதுதான், மீண்டும் நம்பிக்கை வரும் என நான் நினைக்கிறேன், அரசின் செயல்பாடுகள் பற்றி அனைவரும் மகிழ்ச்சியடைவார்கள், இதனால் நமது நாடு சிறப்படையும்" எனவும் அவர் கூறினார்.
சிறந்த கல்வி முறை...
தரமான கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என மூர்த்தி கல்வி வழங்கும் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்தார். "மாணவர்கள் தான் நம் நாட்டின் எதிர்காலம். ஒரு உலக மென்பொருள் இராட்சகர்கள் உருவாவதற்கு, தரமான மென்பொருள் பொறியாளர்கள் வழியை செதுக்குவார்கள்" எனவும் அவர் கூறினார்.
கலாச்சாரம், உள்வளக் மேம்பாடு
ஏனைய கலாச்சாரங்களை புரிந்துகொள்ள கற்றுக்கொள்ளுதல், தகுதிகளை தன்மயமாக்கி கொள்ளுதல், கடமைப்பாங்குடைவர்களாக இருத்தல் அகியவை முகாமைத்துவத் திறனை மேம்படுத்திக் கொள்ளுவதற்கு அவசியம் எனவும் திரு.மூர்த்தி தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications