மும்பை: அன்னிய முதலீட்டில் உலக நாடுகளை அதிக அளவில் கவரும் சீனா கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் நடப்பு நிதியாண்டின் நவம்பர் மாத்தில் சுமார் 2.35 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் கடந்த வருடம் இதே மாதத்தில் 8.84 பில்லியன் டாலர் அன்னிய முதலீடு பெற்றது குறிப்பிடதக்கது.
சீனாவில் கடந்த 10 மாதங்களாக தொடர்ந்து அன்னி, முதலீடு அதிகரித்த வண்ணமே உள்ளது. நடப்பு ஆண்டின் ஜனவரி- நவம்பர் மாதங்களில் சுமார் 105.5 பில்லியன் டாலர் அன்னிய முதலீடாக பெற்றது, அது கடந்த ஆண்டை விட 5.48% அதிகமாகும்.
20,434 புதிய நிறுவனங்கள்
2013ஆம் ஆண்டின் கடந்த 11 மாதங்களில் சுமார் 20,434 நிறுவனங்கள் துவங்கப்பட்டுள்ளது (சூப்பர்..). இது கடந்த ஆண்டை விட 9.19 சதவிதம் குறைவாம் (பாராட..).
உலக நாடுகளின் முதலீடு
சீனாவின் இந்த அன்னிய முதலீட்டு அறிக்கையில் ஐரோப்பிய நாடுகளில் இருந்து முதலீடு 17.36 சதவீதம் உயர்ந்து 6.82 பில்லியன் டாலர் எட்டியதாகவும், அமெரிக்கவின் முதலிடு 8.6 சதவிதம் அகித்ததாகவும், ஜப்பான் நாட்டின் முதலீடம் 6.76 சதவீதம் அதிகரித்துள்ளது என தெரிவித்தது.
சேவை பரிவில் அதிக முதலீடு
சீனா அன்னிய முதலீட்டில் 51.4 சதவீதம் சேவை பரிவில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இது கடந்த ஆண்டை விட 14.04 சதவீதம் அதிகமாகும். மேலும் உற்பத்தி துறையில் 5.71 சதவிதம் குறைந்துள்ளதாகவும் தெரிவித்தது.
80.24 பில்லியன் டாலர்
கடைசியாக கடந்த 11 மாதங்களில் சுமார் 80.24 பில்லியன் டாலர் அளவு சீனாவில் முதலீட்டில் செய்யப்பட்டுள்ளது என அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications