சிகரெட் பிடிப்போர் காதுகளில் புகை??? சிகரெட் விலையை உயர்த்தும் ஐடிசி!!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: "புண்பட்ட இதயத்தை புகைவிட்டு ஆற்ற வேண்டும்" என்று சொல்லும் நன்பர்களே இனி உங்கள் பட்ஜெட் உயரப்போகிறது. ஐடிசி நிறுவனம் தன்னுடைய சிகரெட் பிராண்டுகளின் விலையை 15 சதவிகிதம் வரை உயர்த்த திட்டமிட்டுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை என்றாலும், டீலர்களுக்கும் வியாபாரிகளுக்கும் இந்த தகவல் அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

 

இதன் விளைவாக பல கடைக்காரர்கள், சிகரெட் பெட்டிகளில் அச்சிடப்பட்டுள்ள அதிகபட்ச விலைக்கும் அதிகமாக வாடிக்கையாளர்களிடம் வாங்குகின்றனர்.

 என்னது 10ரூபா அதிகமா??

என்னது 10ரூபா அதிகமா??

தற்போது, பத்து சிகரேட்டுகளை கொண்ட நேவி கட் பிராண்ட் சிகரெட் ரூபாய் 60 ஆக உள்ளது. ஆனால் வியாபாரிகள் அதை 69 அல்லது 70 ரூபாய்க்கு விற்கிறார்கள்.

பேஷ் பேஷ் நல்ல பதில் போங்கோ..

பேஷ் பேஷ் நல்ல பதில் போங்கோ..

"விலை உயர்ந்துவிட்டதாக எங்களிடம் தெரிவித்துள்ளனர். ஸ்டாகிஸ்டுகள் எங்களிடம் அதிக விலைக்கு விற்கிறார்கள். அதனால் நாங்களும் வாடிக்கையாளர்களை அதிக விலை தருமாறு கேட்கிறோம்" என்று ஒரு கடைக்காரர் கூறினார். புதிய விலைகளுடன் கூடிய சரக்குகள் அடுத்த வாரத்தில் வரும் என்று மேலும் அவர் தெரிவித்தார்.

ஐடிசியின் அதிரடி பதில்!! வெறுப்புடன் மக்கள்..
 

ஐடிசியின் அதிரடி பதில்!! வெறுப்புடன் மக்கள்..

இந்த விலை உயர்வை குறித்து ஐடிசி தொடர்பாளரிடம் கேட்டபோது அவர் "விலை உயர்வை குறித்து நாங்கள் இப்போது எதுவும் கூறப் போவதில்லை" என்றார்.

கலால் வரி

கலால் வரி

இந்த ஆண்டின் தொடக்கத்தில் அரசு 2013-14 ஆம் ஆண்டின் பட்ஜெட்டில் சிகரெட்டுக்கான கலால் வரியை உயர்த்தியதை அடுத்து அந்நிறுவனம் சிகரெட் விலைகளை 20 சதவிகிதம் வரை உயர்த்தியது. மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்கள் தங்கள் மாநில பட்ஜெட்டில் புகையிலை வரிகளை உயர்த்தின.

3,723.8 கோடி வியாபாரம்

3,723.8 கோடி வியாபாரம்

ஐடிசி நிறுவனம் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் தன்னுடைய சிகரெட் விற்பனையில் 32% சதவிகித லாபத்தை பதிவுசெய்தது. இந்த காலத்தில் சிகரெட் விற்பனை கடந்த ஆண்டின் விற்பனையான ரூபாய் 3723.8 கோடியிலிருந்து 10 சதவிகிதம் உயர்ந்தது குறிப்பிடதக்கது.

விற்பனையில் சரிவு..

விற்பனையில் சரிவு..

எனினும் சிகரெட் விற்பனை அளவு இரண்டாம் காலாண்டில் எதிர்பார்த்த அளவான (வருட அடிப்படையில்) 2 சதவிகிதமாக இல்லாமல் 5% சதவிகிதமாக குறைந்திருந்தது வல்லுநர்களை கவலையடைய செய்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

ITC may raise cigarette prices

ITC is likely to increase the prices of some of its cigarette brands by up to 15 per cent. While the company is yet to raise the prices officially.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X