டிசம்பர் 20ஆம் தேதி வரையிலான நிலவரப்படி மத்திய அரசின் நேரடி வரி வசூல் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 13.7 சதவிகிதம் உயர்ந்து ரூபாய் 4,12,918 கோடியாக உயர்ந்தது. கடந்த ஆண்டு இது 3,63,338 கோடி ரூபாயாக இருந்தது.
மேற்குறிப்பிட்ட தேதிவரை நிறுவன வரி வசூல் கடந்த ஆண்டின் 2,36,580 கோடி ரூபாயிலிருந்து 10.2 சதவிகிதம் உயர்ந்து ரூபாய் 2,60,752 கோடியாக அதிகரித்துள்ளது.
அதே வேளையில், தனி நபர் வருமான வரி வசூல் 20.5 சதவிகிதம் உயர்ந்து 1,47,987 கோடி ரூபாயாக இருக்கிறது. இது சென்ற வருடம் 1,22,818 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடதக்கது.

சொத்து வரி 752 கோடியாகவும் தற்போது மறுஆய்வில் உள்ள பங்குச் சந்தைகள் மூலமாக விதிக்கப்படும் பங்கு பரிவர்த்தனை வரி வசூல் 3,427 கோடி ரூபாயாகவும் இருந்தன.
முன்கூட்டிய வரி
நேரடி வசூலில் டிசம்பர் வரையில், முன்கூட்டிய வரி வசூல் பங்கு 8.8 சதவிகித வளர்ச்சியுடன் ரூபாய் 2,02,626 கோடியாக இருக்கிறது.
டிசம்பர் வரையிலான முன்கூட்டிய நேரடி வருமான வரி வசூல் 11.9 சதவிகித வளர்ச்சியை பதிவுசெய்து ரூபாய் 25,686 கோடியாக உள்ளது.


Click it and Unblock the Notifications