காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது!!! குதுகலத்தில் வாரன் பஃபெட்...

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்கத் தொழிலதிபர் வாரன் பஃபெட் இந்த வருடம் ஒவ்வொரு நாளும் தன் சொத்து மதிப்பில் 37 மில்லியன் அமெரிக்க டாலர்கள் சேர்த்து வந்தார். மேலும் இந்த வருடம் தான் அவர் அதிகளவில் சம்பாதித்துள்ளதாக சொத்துகள் மதிப்பீட்டு அமைப்பான வெல்த்-எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

2013 ஆம் ஆண்டின் முடிவில் 12.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமானத்துடன் அவருடைய நிகர சொத்தின் மொத்த மதிப்பு சுமார் 59.1 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கிறது. பிரபல நன்கொடையாளரான அவருடைய சொத்தின் மதிப்பு இந்த ஆண்டின் தொடக்கத்‌தில் 46.4 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது குறிப்பிடதக்கது.

காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது!!! குதுகலத்தில் வாரன் பஃபெட்...

எனினும், வெல்த்-எக்ஸ் மதிப்பீடுகள் படி அவர் முதல் பத்து பணக்காரர்கள் பட்டியலில் இடம் பிடிக்கவில்லை. மைக்ரோசாஃப்ட் தலைவர் பில் கேட்ஸ் 2013 ஆம் ஆண்டில் 11.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருவாயுடனும் 72.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சொத்துகளுடனும் முதல் 10 பணக்காரர்களில் முதல் இடத்தில் உள்ளார்.

அந்த அறிக்கையின் படி முதல் பத்து பணக்கார்கள் கூட்டாக 101.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஈட்டியதோடு சராசரியாக 10.2 பில்லியன் அமெரிக்க டாலர்களை 2013 ஆம் ஆண்டில் பெற்றுள்ளனர். இவ்வாண்டு தொடக்கத்தில் 245 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இவர்களின் மொத்த சொத்து மதிப்பு ஏறக்குறைய 345 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது.

இதனிடையே சராசரியாக அவர்கள் தினமும் 29 மில்லியன் அமெரிக்க டாலர்களை வருவாயாக ஈட்டியதோடு அவர்களுடைய சொத்தை 41.6 சதவிகிதம் உயர்த்தியுள்ளனர். இது 24 சதவிகிதம் உள்ள எஸ்&பி 500 மதிப்பீடுகளை ஒப்பிடும்போது அதிகம்.

காசினோ விளையாட்டுத் தொழிலதிபரான ஷெல்டன் அடேல்சன் தான் லாஸ் வேகாஸ், மக்காவ் மற்றும் சிங்கப்பூர் ஆகிய இடங்களிலுள்ள சொத்துக்கள் மூலம் இந்த வருடம் 11.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஈட்டியதோடு கடந்த ஜனவரியில் ரூபாய் 23.9 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்த அவர் நிகர சொத்து 35 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் மேலாக மதிப்பிடப்பட்டுள்ளது.

 

அமேசான் நிறுவன அதிபர் ஜெஃப் பெஜோஸ் 11.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஈட்டி தன் சொத்தை 34.4 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு உயர்த்தியுள்ளார்.

பேஸ்புக் உரிமையாளர் மார்க் ஜுக்கர்பெர்க் 10.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஈட்டி தான் சொத்து மதிப்பை 24.7பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்தியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Warren Buffett adds $37 mn per day in his fortune in 2013

American business magnate Warren Buffett made a fortunes of about USD 37 million per day in 2013, according to Wealth-X, making him the billionaire who made the most money this year.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X