சென்னை: 2014ஆம் வருடத்தில் இந்தியாவில் சுமார் 8.5 இலட்சம் வேலை வாய்ப்பு உருவாக உள்ளதாக ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவிக்கிறது.
எஃப்எம்சிஜி மற்றும் சுகாதாரம் உட்பட பல்வேறு துறைகளிலும் சேர்ந்து மொத்தம் 8.5 இலட்சம் பேருக்கு புதிதாக வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்று சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன. எனவே, வேலை தேடுபவர்கள் யாராக இருந்தாலும், நம்பிக்கையுடன் இருக்க வேண்டிய நேரம் இது!
மோசமான பொருளாதார பின்னணியில் 7.9 இலட்சம் வேலைகளை அளித்த இந்த ஆண்டை விட, வரும் ஆண்டு நம்பிக்கையான ஆண்டாக இருக்கும் என முன்னணி புள்ளி விபர தளமான MyHiringClub.com தெரிவித்துள்ளது.
ஆய்வு செய்யப்பட்ட நிறுவனங்கள்
12 தொழில் துறைகளில் உள்ள 5600 நிறுவனங்களுக்கும் மேலே நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இந்த முடிவுகள் அளிக்கப்பட்டுள்ளன. எஃப்எம்சிஜி மட்டுமல்லாமல், சுகாதாரம், தகவல் தொழில் நுட்பம் மற்றும் விருந்தோம்பல் (Hospitality) துறைகளிலும் அதிகளவிலான வேலைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
நிலையற்ற பொருளாதார நிலை
'நிலையற்ற பொருளாதார மற்றும் அரசியல் சூழல்களால் கடந்த ஆண்டு வேலை தேடுபவர்கள் மற்றும் வேலை தருபவர்கள் என இருசாராருக்கும் மோசமான ஆண்டாக இருந்தது. 8.5 இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பளிக்கும் வகையில் வரும் 2014-ம் ஆண்டு மிகவும் நம்பிக்கையூட்டுவதாக இருக்கும்', என்று MyHiringClub.com இணைய தளத்தின் முதன்மை செயல் அலுவலரான ராஜேஷ் குமார் தெரிவித்தார்.
உண்மையான நிலை
'வேலை செய்யும் திறனுடைய மற்றும் வேலை செய்ய தயாராக உள்ள திறமை மிக்க பணியாளர்களை கண்டறிவதும் மற்றும் அவர்களை பணி சூழல்களில் வைத்திருப்பதும் மிக பெரிய பிரச்னையாக உள்ளது, மேலும் வளர்ச்சியை அச்சுறுத்துவதாகவும் உள்ளது. இந்த பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்' என்றும் ராஜேஷ் குமார் தெரிவித்தார்.
2014லில் அதிகம் வேலைவாய்ப்புள்ள துறைகள்
1.5 இலட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கி எஃப்எம்சிஜி துறை இந்த புள்ளி விபரத்தில் முன்னணியிலும், 1.33 இலட்சம், 1.21 இலட்சம், 86,700 மற்றும் 83400 ஆகிய எண்ணிக்கைகளுடன் சுகாதாரத் துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த துறைகள், சில்லறை விற்பனைத் துறை மற்றும் விருந்தோம்பல் துறைகள் ஆகியவை முறையே பின் தொடர்ந்தும் வருகின்றன.
இதர துறைகள்
வங்கி மற்றும் நிதி சேவைகள் துறை - 61,400, உற்பத்தி மற்றும் பொறியியல் துறை - 51,500, கல்வி, பயிற்சி மற்றும் ஆலோசனை துறை - 42,900, ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு துறை - 42,800 மற்றும் ரியல் எஸ்டேட் துறை - 38,700 ஆகிய எண்ணிக்கைகளில் புதிதாக வேலைகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மோசமான ஆட்சேர்ப்பு நடவடிக்கை
'2013-ம் ஆண்டில் ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் நாங்கள் எதிர்பார்த்ததை விடவும் மோசமான அளவிலும், பெரும்பாலான தேவைகள் பெருத்த இடைவெளிகளை நிரப்புவதை அடிப்படையாக கொண்டுமே ஏற்படுத்தப்பட்டன' என்று முன்னணி மனித வள ஆலோசனை நிறுவனத்தின் மனித வள வல்லுநரான பிராச்சி குமாரி தெரிவித்தார்.
நம்பிக்கையூட்டும் 2014
'வரப்போகும் 2014-ஆண்டு மிகவும் நம்பிக்கையூட்டுவதாக உள்ளது. தங்களுடைய வருமானத்தை உயர்த்த விரும்பும் நிறுவனங்கள் நெடுநாட்களாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவும் மற்றும் 2013-ம் ஆண்டை விட அதிகமான பணியிடங்களை உருவாக்கவும் நினைக்கும்.
வெற்றி நமக்கே!!!
ஒட்டுமொத்தமாக குறிப்பிடும் பொழுது, அடுத்த இரண்டு ஆண்டுகளில் வேலைவாய்ப்பு சந்தை அனுபவித்து வந்த மோசமான சூழல்கள் களையப்பட்டு, வெற்றிகரமான மற்றும் நம்பிக்கையான வளர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய நாம் செல்லப் போகிறோம்' என்றும் அவர் குறிப்பிட்டார்.
அனைவருக்கு வேலை கிடைக்கும் என நம்புவோம்!!!..
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications