தீர்ந்து போன தபால் கார்டுகள்: அவதியில் சென்னை மக்கள்!!..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: சென்னை தபால் நிலையங்களில் சாமானிய மக்கள் பெருமளவில் பயன்படுத்தும் 50 பைசா தபால் கார்டுகள் திடீரென தீர்ந்து போனதால் வழக்கமாக புதுவருட வாழ்த்துக்கள் அனுப்பும் வழக்கம் கொண்டவர்கள் கவலையடைந்துள்ளனர்.

 

"நகரத்திலுள்ள பெரும்பாலான தபால் நிலையங்களில் ஒரு கார்டு கூட இல்லை. கடந்த இருபது வருடத்தில் இந்த முறைதான் கார்டு பற்றாக்குறையால் என்னால் வாழ்த்துக்களை அனுப்ப முடியவில்லை" சில நூறு கார்டுகளை வாங்க பல தபால் நிலையங்களுக்கு சுற்றியலைந்து அலுத்த 70 வயது முதியவர் லக்ஷ்மி நரசிம்மன் தெரிவித்தார்.

ஏன் இந்த நிலை!!

ஏன் இந்த நிலை!!

ஹைதராபாதில் உள்ள தபால் கிடங்கில் இருந்து கோரப்பட்ட தேவையான அட்டை மற்றும் பிற தபால் சரக்குகளை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. இதன் காரணமாகவே கடந்த இரு மாதங்களுக்கு முன் சென்னை நகரத்தில் உள்ள தபால் நிலையங்களில் கார்டு இருப்பு தீர்ந்து போகத் தொடங்கியது என சென்னை மற்றும் தமிழ்நாடு மண்டல பொதுத் தலைமை அதிகாரி மெர்வின் அலெக்ஸாண்டர் தெரிவித்தார்.

2 லட்சம் தபால் கார்டுகள்..

2 லட்சம் தபால் கார்டுகள்..

"இந்த நிலவரத்தை யாரும் எங்களது கவனத்திற்கு கொண்டு வரவில்லை. நாங்கள் இரண்டு லட்சம் தபால் கார்டுகளுக்கான அவசர சரக்கு விண்ணப்பம் செய்துள்ளதோடு அது அடுத்த வாரம் கிடைக்கும் என நம்புகிறோம் " என பிசினெஸ் லைன் இதழுக்கு அவர் தெரிவித்துள்ளார்.

தட்டுப்பாடு..
 

தட்டுப்பாடு..

கார்டுகளுக்கான தேவையை குறித்துக் கேட்டபோது, வருடத்தின் இந்த நேரத்தில், வயதானவர்கள் புத்தாண்டு வாழ்த்துக்களை அனுப்ப இதை முக்கியமாக வாங்குவார்கள் என்றும் எனினும், மொத்தமாக வர்த்தக பயன்களுக்காக வாங்குபவர்களின் உபயோகம் குறைந்துள்ளதால், கார்டுகளின் தேவை குறைந்துள்ளதுள்ளதோடு மின்னணு அஞ்சல் ஊடக முறைகளை அவர்கள் உபயோகிப்பதாகவும் தெரிவித்தார்.

சரிவில் தபால் உபயோகமாக

சரிவில் தபால் உபயோகமாக

எடுத்துக்காட்டாக, நாடு முழுவதும் 2006-07 ஆம் ஆண்டில் 86 கோடியாக இருந்த கார்டு உபயோகம் 2010-11ல் 77 கோடியாகக் குறைந்துள்ளது. இந்த குறையும் நிலை நீடிப்பதோடு இன்லண்ட் தபால்கள் அடுத்த மாற்றாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Chennai post offices run out of 50-paise cards

Post offices in Chennai appear to have run out of 50-paise post cards, the common man’s cheapest postal communication, worrying old timers who use these cards to send out new year season greetings.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X