கடன் சுமையை குறைக்க விமானங்களை விற்கும் ஏர் இந்தியா!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: ஏர் இந்தியா நிறுவனம் அதன் போயிங் 777-200 லாங் ரேஞ்ச் ரக விமானங்களை எடிஹாட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு விற்க ஒப்புதலைப் பெற்றுள்ளது.

இந்த விற்பனையின் மூலம் ஏர் இந்தியாவுக்கு சுமார் 360 மில்லியன் டாலர் ஈட்ட முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த விற்பனையில் சுமார் 5 போயிங் 777-200 லாங் ரேஞ்ச் ரக விமானங்களை விற்க பொருளாதார விவகாரங்களுக்கான கேபினெட் கமிட்டி, கடந்த வியாழனன்று நடைபெற்ற அதன் கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் 24 சதவீத பங்குகளை கையகப்படுத்திக் கொள்வதற்கு சமீபத்தில் சட்டப்பூர்வமான ஒப்புதல்கள் அனைத்தையும் பெற்றுள்ள எடிஹாட் ஏர்வேஸ் நிறுவனம், அபு தாபி மற்றும் லாஸ் ஏஞ்சலீஸ் ஆகியவற்றுக்கு இடையே நிறுத்தமின்றி இயக்கப்படக்கூடிய விமான சேவையை அறிமுகப்படுத்தி, அதற்கு இந்த ஐந்து விமானங்களையும் உபயோகப்படுத்தவுள்ளது.

இந்த லாஸ் ஏஞ்சலீஸ்-அபு தாபி விமான சேவை 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் 1ஆம் தேதியிலிருந்து அறிமுகப்படுத்தப்படும் என்று எடிஹாட் நிறுவனம் ஏற்கெனவே அறிவித்துவிட்டது.

கடன் சுமை

கடன் சுமை

இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தின் போது இவ்விரு விமான நிறுவனங்களும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட போது, அறிவிக்கப்பட்ட இவ்விற்பனை மூலம் கிடைக்கக்கூடிய நிதி தொகையை ஏர் இந்தியா அதன் கடன் சுமையை குறைக்க உபயோகிக்கவுள்ளது என ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்தது.

2,200 கோடி கடன்!!

2,200 கோடி கடன்!!

2012 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், ஏர் இந்தியாவுக்கு கடன் வழங்கியவர்கள், சுமார் 18,000 கோடி ரூபாய் பெறுமானமுள்ள அதன் கார்ப்பரேட் கடன் மறுசீரமைப்பு திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளதோடு, சுமார் 2,200 கோடி ரூபாய் அளவிலான புதிய கடன் வழங்கவும் தீர்மானித்துள்ளனர்.

68 விமானங்கள்
 

68 விமானங்கள்

ஏர் இந்தியா, 2006 ஆம் ஆண்டில் அமெரிக்க விமான உற்பத்தியாளர் ஒருவரிடமிருந்து வாங்கிய 68 விமானங்களுள் ஒரு பகுதியாக இந்த 5 போயிங் 777-200 எல்ஆர் ரக விமானங்களும் அடங்கும்.

35,000 கோடி!!

35,000 கோடி!!

இந்த ஒப்பந்தம் கையெழுத்தான போது, இதன் மதிப்பு சுமார் 35,000 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்பிடப்பட்டது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Air India gets green signal to sell five 777s to Etihad

Air India has got the Cabinet’s nod to sell five Boeing 777-200 Long Range aircraft to Etihad Airways.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X