வாகன விற்பனையில் 20% சரிவு!!! சோகத்தில் டாடா மோட்டார்ஸ்..

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாகன விற்பனை கடந்த ஆண்டின் நவம்பர் மாதத்தை ஒப்பிடும் போது சுமார் 20% சதவீதம் குறைநதுள்ளது என அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

மேலும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தன் உலகளாவிய விற்பனையில் கடந்த வருடம் நவம்பர் மாதத்தில் 1,02,337 வாகனங்களை விற்றது ஆனால் இந்த வரும் 81,957 வாகனங்களை விற்று 20 சதவீதம் சரிவை சந்தித்தது.

டாடா நிறுவனத்தின் பயணிகள் வாகன விற்பனை 18,440 வாகனங்களில் இருந்து 10,747 வாகனங்களாக குறைந்தது.

வாகன விற்பனையில் 20% சரிவு!!! சோகத்தில் டாடா மோட்டார்ஸ்..

2 இரண்டு வருடங்களுக்கு முன்பு டாடா நிறுவனம் ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் உலகளாவிய விற்பனையை கைப்பற்றியது. இதனையடுத்து ஜாகுவார் லேண்ட் ரோவர் வாகனங்களின் விற்பனையில் உலகளவில் ஒரு புரட்சியை ஏற்பட்டது. கடந்த வருடம் ஜாகுவார் லேண்ட் ரோவர் வாகனங்களின் விற்பனை 34,649 இருந்தது, இவ்வருடம் 39,956 ஆக உயர்ந்தது.

இந்நிலையில் மும்பை பங்கு சந்தையில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பங்கு விலை 192.50 ரூபாய் என்ற நிலையில் வர்த்தகம் செய்யப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+