4 நிறுவனங்களின் அந்நிய முதலீட்டுத் திட்டங்களுக்கு பச்சைக்கொடி!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: மாலே ஹோல்டிங் இந்தியா, ஹெச் பி ஒ இந்தியா உட்பட நான்கு அந்நிய நிறுவனங்களின் நேரடி முதலீட்டுத் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இத்திட்டத்தின் மதிப்பு சுமார் 502 கோடியாகும்.

 

கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற அந்நிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியத்தின் கூட்டத்தில் செய்யப்பட்ட பரிந்துரையின் பேரில் இந்த அனுமதிகள் அளிக்கப்பட்டதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மாலே ஹோல்டிங் இந்தியா

மாலே ஹோல்டிங் இந்தியா

மாலே ஹோல்டிங் இந்தியா நிறுவனம் ஏற்கனவே உள்ள தன்னுடைய வெளிநாட்டு முதலீட்டாளர்களின் மூலமாக மேலும் முதலீடுகளை கொண்டுவர அரசு அனுமதி பெற்றுள்ளது இது சுமார் 500 கோடி ரூபாய் பெறுமானமுள்ளது.

ஹெச் பி ஒ இந்தியா

ஹெச் பி ஒ இந்தியா

ஹெச் பி ஒ இந்தியா செய்திகள் அல்லாத மற்றும் நடப்பு நிகழ்ச்சிகள் தொடர்புடைய சேனல்களை வெளிநாட்டு இணைப்புகள் மூலமாக ஒளிபரப்பத் திட்டமிட்டுள்ளது.

மற்ற இரு நிறுவனங்கள்

மற்ற இரு நிறுவனங்கள்

அனுமதி பெற்ற மற்ற இரு நிறுவனங்களில் மும்பையின் எர் வோர்க்ஸ் இந்தியா இன்ஜினியரிங் மற்றும் ஹாங்காங் நாட்டை சேர்ந்த மல்கா அமித் குளோபல் நிறுவனம் ஆகியவை அதில் இடங்கும் அடங்கும்.

நிலுவையில் உள்ள விண்ணப்பம்
 

நிலுவையில் உள்ள விண்ணப்பம்

இந்தியன் ரோடோகிரப்ட் நிறுவனத்தின் திட்ட விண்ணப்பம் நிலுவையில் உள்ளதாக அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.

நிலுவைக்கான காரணம்

நிலுவைக்கான காரணம்

இது பாதுகாப்பு அமைச்சகத்தின் வேண்டுகோளின் பேரில் புதிய மேம்படுத்தப்பட்ட ஏ டபிள்யு 119 கேஎக்ஸ் ரக ஹெலிகாப்டரை வழங்கும் வகையில் மனுவினை மறு ஆய்விற்கு உட்படுத்தப்பட உள்ளதால் நிலுவையில் உள்ளதாகத் தெரிகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Govt approves 4 FDI proposals worth of Rs. 502 cr

Four foreign direct investment proposals, including that of Mahle Holding India and HBO India, totalling Rs 502 crore have been cleared by the government.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X