ஆதர்ஷ் சாஸ்திரியை தொடர்ந்து பாலகிருஷ்ணன் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: சமீபத்தில் இன்போசிஸ் நிறுவனத்தின் தலைமைக் குழுவில் இருந்து விலகி மென்பொருள் தொழிற்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பாலகிருஷ்ணன் ஆமா ஆத்மி கட்சியில் இணைத்துள்ளார்.

 

"ஆமாம், ஆம் ஆத்மி கட்சியில் நானும் ஒரு உறுப்பினராகியுள்ளேன். அக்கட்சி இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது" என்று அவர் பி டி ஐ செய்திகளுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். மேலும் அவர் "அவர்கள் (ஆம் ஆத்மி கட்சி) நாட்டின் அரசியலில் ஒரு பெரும் புரட்சியை ஏற்படுத்தியது என்னை மிகவும் கவர்ந்தது" என்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக டிசம்பர் 20 ஆம் தேதி அவர் விலகலை அறிவித்த இன்போசிஸ் நிறுவனம் அவரது அதிகாரபூர்வ விலகல் டிசம்பர் 31 ஆம் தேதியோடு இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

உண்மையில் இந்திய அரசியலுக்கு அது அருமையான துவக்கம். படித்தவர்கள் அட்சிக்கு வந்தால் நாடும், நாட்டு மக்ககளும் நன்றாக இருக்கும் என்பதை கரைபடிந்த அரசியல்வாதிகளுக்கு உணர்த்த இது அருமையான சந்தர்ப்பம்.

பாலகிருஷ்ணன்

பாலகிருஷ்ணன்

1991 ஆம் ஆண்டில் இன்போசிஸ் நிறுவனத்தில் சேர்ந்த பாலகிருஷ்ணன் பின்னர் அந்நிறுவன தலைமை நிதி அதிகாரியாக உயர்ந்ததோடு அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாகி (CEO) பதவிக்கும் முதல் நிலை போட்டியாளராக இருந்ததாகத் தெரிகிறது.

 

 

அரசியல் மற்றும் வர்த்தகம்

அரசியல் மற்றும் வர்த்தகம்

வர்த்தக பொறுப்புகளோடு அரசியலிலும் முழு நேரமாக ஈடுபடுவீர்களா என கேட்டதற்கு அவர் "எதிர்காலத்தில் இரண்டையும் சேர்ந்து செய்ய இயலும் என நினக்கிறேன் " என்று கூறினார்.

கூட்டு முயற்சி

கூட்டு முயற்சி

இன்போர்சிஸ் நிறுவனத்திலிருந்து வெளியேறிய பின் தாம் இன்போசிஸ் இன் முன்னால் அதிக்றி மோகன்தாஸ் பாய், விப்ரோ நிறுவன முன்னால் அதிகாரி கிரீஸ் பரஞ்ச்பே ஆகியோருடன் கூட்டு சேர்ந்து உருவாக்கவுள்ள ஒரு தனியார் பங்கு நிதி முதலீட்டு நிறுவனத்திற்கு செபி-இடம் அனுமதிக்காக காத்துக்கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

தேர்தலில் போட்டி!!
 

தேர்தலில் போட்டி!!

மக்களவை தேர்தலில் போட்டியிடுவது குறித்த கேள்விக்கு "இவ்வளவு முன்கூட்டியே அதை பற்றி கூறுவது கடினம்" என்றார் .

இன்போசிஸ்

இன்போசிஸ்

இன்போசிஸ்-இன் பீபிஒ நிறுவன தலைவராகவும், இன்போசிஸ் லோட்ச்டோன் என்ற சர்வதேச ஆலோசனை நிறுவனத்தின் தலைவராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

லால் பகதுர் சாஸ்திரி

லால் பகதுர் சாஸ்திரி

இதேபோல் லால் பகதுர் சாஸ்திரி அவர்களின் பேரன் ஆதர்ஷ் சாஸ்திரி அமெரிக்காவில் ஆப்பிள் நிறுவனத்தில் உயர் பதவியில் பணியாற்றி வந்தார். ஆம் ஆத்மி கட்சி துவங்கியதை கண்டு அவர் ஆர்வமுடன் பணியை ராஜினாமா செய்து நாட்டு மக்களுக்கு பணியாற்ற ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.

 

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Infosys ex-board member Balakrishnan joins AAP

V. Balakrishnan, who stepped down as board member of software behemoth Infosys recently creating ripples in the corporate circles, has joined the Aam Aadmi Party (AAP).
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X