இந்திய வங்கி துறையின் நிலை என்ன?? ரிசர்வ் வங்கி எச்சரிக்கை..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: அதிகரித்து வரும் வாராக் கடன்கள் மற்றும் பிரச்னைகளில் உள்ள நிறுவன கடனாளிகளின் கடன்களை மறுசீரமைப்பு பணி (Restructuring debt) ஆகியவற்றின் காரணமாக ரூ.81 டிரில்லியன்கள் மதிப்புடைய இந்திய வங்கிகள் துறை அதிகப்படியான பாதிப்புகளுக்கு உள்ளாகும் என்று இந்திய ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.

அதீதமான பணவீக்கம், இந்திய பொருளாதாரத்தின் முக்கியமான பிரச்னையாக உள்ளது என்று தனது நிதி நிலைப்புதன்மை அறிக்கையில் (Financial Stability Report- FSB) இந்திய ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.

இந்திய வங்கி துறையின் நிலை என்ன?? ரிசர்வ் வங்கி எச்சரிக்கை..

கடந்த ஜீன் 27-ம் தேதி வெளியிடப்பட்ட நிதி நிலைப்புத் தன்மை அறிக்கைக்குப் பின்னர், வங்கிகளுக்கான பாதிப்புகள் அதிகரித்துள்ளதாகவும் இந்திய ரிசர்வ் வங்கி இவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

'வங்கிகளின் நிலைப்புத் தன்மையை குறியீடு அனைத்து பரிணாமங்களிலும் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவது தெரிகிறது' என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 'பட்டியலிடப்பட்ட வணிக வங்கிகளின் (Scheduled Commercial Banks) சொத்துக்களின் மதிப்பு ஒரு முதன்மையான அச்சுறுத்தலாக தொடர்ந்து வருகிறது. இந்த வங்கிகளிடம் உள்ள செயல்பாட்டில் இல்லாத மொத்த சொத்துக்களின் விகிதமும், மறுசீரமைக்கப்பட்ட முன்பண தரமும் அதிகரித்துள்ளன.'

மார்ச் மாதத்துடன் முடிவடைந்த ஆண்டின் வளர்ச்சி விகிதம் 5%-ஆக குறைந்து, கடந்த பத்தாண்டுகளிலேயே மிகவும் குறைந்த அளவினதாகவும், அதிக கடன் செலவுகளும் மற்றும் அரசு மற்றும் கட்டுப்பாட்டு நிறுவனங்களின் அனுமதி பெற வேண்டி நிலுவையிலுள்ள திட்டங்களும் கடன் வாங்கியவர்கள் அவற்றை திரும்ப செலுத்துவதை கடினமாக்கியுள்ளதால், வாராக் கடன்கள் அதிகரித்துள்ளன.

பட்டியலிடப்பட்ட 40 வங்கிகளின் செயல்பாட்டில் இல்லாத சொத்துக்களின் மதிப்பு (Non-Performing Assets-NPA) ஆண்டின் துவக்கத்தில் ரூ.1.67 டிரில்லியன்களாக இருந்து ரூ.2.29 டிரில்லியன்களாக அதிகரித்து 36.95 சதவீதம் அதிகரித்துள்ளது. மறுசீரமைக்கப்பட்ட முன்பணமும் இதே அளவில் அச்சுறுத்துவதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

இந்திய வங்கிகள் நிறுவன கடன் சீரமைப்பு (Corporate Debt Restructuring) அமைப்புகள் மற்றும் இரு நிறுவனங்களுக்கிடையேயான ஒப்பந்தங்களின் மூலம் ரூ.4 டிரில்லியன்களை கடன் வாங்கி பிரச்னைகளில் உள்ளவர்களுக்காக சீரமைப்பு செய்து வருகின்றன.

இந்த நிறுவன கடன் சீரமைப்பு வழிமுறையில் செப்டம்பர் மாதம் வரையிலும் இது ஒட்டுமொத்தமாக ரூ.2.7 டிரில்லியன்கள் அளவிற்கு வங்கிகள் மறுசீரமைப்பு செய்துள்ளன. இதில், நிறுவன கடன் சீரமைப்பு அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட பின் சில கடனாளிகளின் கடன்கள் ரூ.2 டிரில்லியன்கள் அளவிற்கு மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

இந்திய வங்கி துறையின் நிலை என்ன?? ரிசர்வ் வங்கி எச்சரிக்கை..

நிறுவன கடன் சீரமைப்பு என்பது வங்கிகளெல்லாம் இணைந்து செயல்படும் ஒரு குழுமமாக செயல்பட்டு, நிதிச்சுமையுள்ள நிறுவனங்களுக்கு கடனை திரும்ப செலுத்துவதிலிருந்து விடுமுறை அளிக்கவோ (Payment Holiday), கடன் செலுத்தப்பட வேண்டிய காலத்தை நீட்டிக்கவோ, கடன்களை அளிக்கும் செலவினங்களை தள்ளுபடி செய்யவோ மற்றும் சில நேரங்களில் கடன் வாங்கியவர் செலுத்த வேண்டிய பணத்தின் அளவைக் கூட குறைக்கவோ செய்யக் கூடிய ஒரு கூட்டமைப்பாகும். வங்கி மற்றும் கடன் வாங்கியவர்கள் ஆகிய இருவருக்குள்ளும் இவ்வகையில் ஒப்பந்தங்கள் (Bilateral Recasts) ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.

பொருளாதாரம் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் காணாத போது, இந்த கடன்களில் 15 முதல் 20% தவறான கடன்களாக மாற வாய்ப்புகள் உள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இம்மாதத்தின் துவக்கத்தில், தவறான கடன்களை ஆரம்பத்திலேயெ கண்டறிதல் மற்றும் மதிப்பு வாய்ந்த சொத்துக்களை தீர்மானித்தல், வேண்டுமென்றே தவறிழைப்பவர்களின் மேல் கடுமையான நடவடிக்கைகள் எடுத்தல் மற்றும் தவறான கடன்களை கையாளும் போது சொத்துக்களை மறுசீரமைக்கும் நிறுவனங்களுக்கு அதிகமான சுதந்திரம் அளித்தல் என இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் நிறைய மாற்று நடவடிக்கைகளும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இந்திய ரிசர்வ் வங்கியின் கருத்துப்படி, மார்ச் மாதத்தில் 9.2% ஆக இருந்த சுமையான முன்பண விகிதத்தின் அளவு செப்டம்பர் மாதத்தின் முடிவில் 10.2% ஆக உயர்ந்துள்ளது. கட்டுமானம், இரும்பு மற்றும் எஃகு, ஜவுளி, விமானம் மற்றும் சுரங்கத் துறைகள் எல்லாம் சேர்ந்து பட்டியலிடப்பட்டுள்ள வங்கிகளின் மொத்த முன்பணத்தில் 24% ஆகவும் மற்றும் இதில் 53% சுமையான முன்பணம் எனவும் இந்திய ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.

மாநிலங்களால் நடத்தப்பட்டு வரும் வங்கிகளிலேயே சுமையான முன்பணம் பெருமளவில் வருகிறது என்றும், இதில் 'மத்திய மற்றும் பெருந்தொழில்' நிறுவனங்களே, 'சிறு மற்றும் குறுந்தொழில்' நிறுவனங்களை விட அதிக அளவில் முன்பணம் பெறுகின்றன என்றும் இந்திய ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.

அக்டோபர் 18-ம் தேதி நிலவரப்படி, இந்திய வங்கிகளில் நிலுவையிலுள்ள கடன்களில், மத்திய மற்றும் பெருந்தொழில் நிறுவனங்கள் முறையே ரூ.1.3 டிரில்லியன்கள் மற்றும் ரூ.19.2 டிரில்லியன்கள் என வைத்துள்ளன. அதே சமயம், இது சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களில் ரூ.3 டிரில்லியன்களாக உள்ளது.

'வங்கி அமைப்புகளின் முக்கியமான பிரச்னைகளில் ஒன்றாக செயல்பாட்டில் இல்லாத சொத்துக்கள் தொடர்ந்து இருந்து வந்தாலும், முதலாவது காலாண்டை விட இரண்டாவது காலாண்டில் இன்கிரிமென்டல் ஸ்லிப்பேஜ் குறைவாகவே இருக்கும். ஆனால் மூன்றாவது காலண்டின் பலன்களுக்குப் பின்னரே ஒரு தெளிவான அறிகுறி வெளிப்படும்' என்று கார்வி பங்கு வர்த்தக நிறுவனத்தைச் சேர்ந்த ஹடிம் ப்ரோச்வாலா என்ற நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதாரம் நிலைப்புத்தன்மையுடன் எழுந்து நிற்கும் வரையிலும், புதிதாக மறுசீரமைப்பு கடன்கள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கும் என்றும் ப்ரோச்வாலா குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI warns of more pain for banks

The Reserve Bank of India (RBI) warned on Monday that India's Rs. 81 trillion banking industry faces higher risks because of increasing bad loans and restructuring of debt by stressed corporate borrowers.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X