ஊழல் புகாரின் காரணமாக ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தை கைவிட்டது!! மத்திய அரசு..

டெல்லி: உலகின் ஹெலிகாப்டர் தயாரிப்பு நிறுவனமான அகஸ்டாவெஸ்ட்லாண்ட் நிறுவனத்திடமிருந்து 12 ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கான ஒப்பந்ததத்தை மத்திய அரசு கைவிட்டது.இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் 3,500 கோடி ரூபாய் மதிப்புடையதாகும்.

இத்தாலிய நிறுவனமான ஃபின்மெக்கானிகாவின் ஆங்கிலோ-இந்திய கிளை நிறுவனமான அகஸ்டாவெஸ்ட்லாண்ட் நிறுவனம், இந்திய பாதுகாப்பு அமைச்சகத்திடம் ஹெலிகாப்டர்களை விற்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்ட போது, ஃபின்மெக்கானிக்கா நிறுவனம் அராஜகமாக நடந்து கொண்டதாக எழுந்த குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்து இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தத்தை பெறுவதற்கு லஞ்சம் வழங்கப்பட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது.

ஊழல் புகாரின் காரணமாக ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தை கைவிட்டது!! மத்திய அரசு..

அரசாங்கம் வெளியிட்ட ஒரு அறிக்கையில், "அகஸ்டாவெஸ்ட்லாண்ட் இன்டர்நேஷனல் (ஏடபிள்யுஐஎல்) நிறுவனத்துடன் 2010 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தின் போது கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம், ஒப்பந்தத்துக்கு-முற்பட்ட ஒருமைப்பாட்டு உடன்படிக்கை மற்றும் ஏடபிள்யுஐஎல் நிறுவனத்தின் ஒப்புதல் ஆகியவற்றின் அடிப்படையில் உடனடியாக ரத்து செய்யப்படுகிறது." என்று தெரிவித்துள்ளது.

அட்டர்னி-ஜெனரலிடமிருந்து இவ்விவகாரம் குறித்த அவரது கருத்தை புதிதாகப் பெற்ற பின்னரே இவ்வொப்பந்தத்தை ரத்து செய்யும் முடிவு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னரும், அட்டர்னி-ஜெனரல் இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட வேண்டும் என்றே கருத்து தெரிவித்திருந்தார்.

ஆனால், ஏடபிள்யுஐஎல் மத்தியஸ்தத்துக்கு ஒப்புக்கொள்ளுமாறு அழுத்தம் கொடுத்து, தன் தரப்பிலிருந்து மத்தியஸ்தர் ஒருவரையும் நியமித்ததன் பிற்பாடு, இந்திய அரசாங்கம் இது குறித்து ஏஜியின் கருத்து என்ன என்பதை மீண்டும் ஒருமுறை கேட்டுக்கொண்டது.

ஃபின்மெக்கானிகாவின் தலைமை நிர்வாக அதிகாரி, இந்தியாவில் லஞ்சம் கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு ஊழல் மற்றும் கையாடல் வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ளதாக இத்தாலிய மீடியாக்களில் செய்தி வெளியானதையடுத்து, இந்த வழக்கைப் பற்றிய விவரங்களை அறிந்து கூறும்படி சென்ட்ரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் துறை பணிக்கப்பட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+