டெல்லி: இந்தியாவின் முன்னணி நடிகர் அமிதாப் பச்சன் திரைப்படங்கள் தவிர பல விளம்பரகளில் நடித்து வருகிறார். மேலும் அவர் பல நிறுவனங்களின் ஆஸ்தான விளம்பர மற்றும் நிறுவன தூதராகவும் இருக்கிறார், இதில் ஜஸ்ட் டயல், பார்க்கர், ரீட் & டைலர் நிறுவனங்களும் அடங்கும்.
இது மட்டும் அல்லாமல் அமிதாப் பச்சன் இந்தியாவின் பல முன்னணி நிறுவன பங்குகளில் முதலீடு செய்து வருகிறார். இத்தகைய முதலீட்டில் ஜஸ்ட் டயல் நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனம் கடந்த ஜூன் 5ஆம் தேதியண்று தான் பங்கு சந்தையில் கால் பதித்தது. துவக்கத்தில் ஜஸ்ட் டயல் நிறுவனத்தில் அமிதாப் பச்சன் இந்நிறுவன பங்குகளில் 3.83 கோடி முதலீடு செய்தார்.

இந்த 7 மாதக்காலத்தில் இந்த முதலீட்டின் மதிப்பு சுமார் 161 சதவீதம் உயர்ந்தது. இதன் மூலம் அமிதாப் பச்சனின் 3.83 கோடி முதலீடு 10 கோடியை எட்டியது.
பங்கு சந்தையில் கால் பதிக்கும்போது இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு 611.45 ரூபாயாக இருந்தது, ஆனால் இப்போது ஒரு பங்கின் விலை 1538.40 ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும் உச்ச வரம்பு விலையாக ரூ.1,648 உயர்ந்துள்ளது.


Click it and Unblock the Notifications