ஏர் இந்தியா பணிப் பெண்களுக்கு விடிவு காலம் பிறந்தது!!..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: விமான பயணம் என்றாலே நாம் அனைவருக்கும் மனதில் தோன்றுவது விமானப் பணிப் பெண்கள் தான். இவர்களின் உடை, ஒப்பனை, பயணிகளின் கவனிப்பு அனைவரையும் கவர்ந்து விடும். பயணிகளை கவர சில விமான நிறுவனங்கள் விமான பணிப் பெண்களுக்கு மிகவும் கவர்ச்சியான உடைகளை பயன்படுத்துவர். இதைபற்றி கேள்வி ஏழுப்பினால் இது ஒரு வியாபார உத்தி என தம்பட்டம் அடித்துகொள்கின்றனர்.

 

அனைத்து நிறுவனங்களும் இப்படி செயல்பட, ஏர் இந்தியா நிறுவனம் மட்டும் விதிவிளக்காக செயல்பட்டு வந்தது. இந்நிறுவன பணிபெண்களுக்கு துவக்கும் முதல் சேலையை மட்டுமே சீருடையாக வழங்கி வந்தது குறிப்பிடதக்கது. இது வெகு நாட்களாகவே நிறுவன பணிப் பெண்களுக்கும் சரி, பயணிகளுக்கும் சரி ஒரு மாற்றம் தேவைப்பட்டது.

ஏர் இந்தியா (AI) இந்த ஆண்டு துவக்கம் முதலே அதிரடி மாற்றங்களை செய்ய முனைந்துள்ளது. இதில் ஒரு பகுதியாக அவர்களின் விமான பணிப்பெண்களை விரைவிலேயே குர்தி, சுரிதார் மற்றும் பேன்டை சீருடையாக மாற்ற திட்டமிட்டுள்ளது. ஏர் இந்தியாவின் மகாராஜா கவர்ச்சி பழமையானதால், சமகாலத்திய தோற்றத்தோடு பயணிகளை சந்தோஷப்படுத்தவே இந்த மாற்றங்களை கொண்டு வர ஏர்இந்தியா திட்டமிட்டுள்ளது.

ஏர் இந்தியா - நிஃப்ட்

ஏர் இந்தியா - நிஃப்ட்

ஏர் இந்தியா சில மாதங்களுக்கு முன் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஃஆப் ஃபேஷன் டெக்னாலஜியை (NIFT) அணுகி அவர்களின் விமானப் பணியாளர் குழு மற்றும் விமானத்தில் இல்லாத மற்ற பணியாளர்களுக்கும் புது வகை சீருடையை வடிவமைக்க கோரியது.

3 வித டிசைன்கள்

3 வித டிசைன்கள்

"NIFT மூன்று வித டிசைன்களை சமர்ப்பித்துள்ளது - விமானத்தில் இல்லாத பணியாளர்களுக்கு ஒன்று, விமானப் பணியாளர் குழுவுக்கு இரண்டு. அடுத்த வாரத்திற்குள் இறுதி டிசைன்கள் முடிவு செய்யப்படும்." என ஏர் இந்தியாவின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

பாரம்பரியத்தை உணர்த்தும் சீருடை
 

பாரம்பரியத்தை உணர்த்தும் சீருடை

சிகப்பு-வெள்ளை-கருப்பு வண்ணங்கள் அடங்கிய சேலை தான் பல ஆண்டுகளாக ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான பணிப்பெண்களின் சீருடையாக விளங்கி வருகிறது. "இந்தியாவின் பாரம்பரியத்தை உணர்த்தும் சின்னமாக விளங்கும் சேலையை நாங்கள் விடப் போவதில்லை. இருப்பினும் உள் நாட்டு மற்றும் சர்வதேச பிரிவில் வேலைப்பார்க்கும் விமானப் பணியாளர் குழுவிற்கு சமகாலத்திய தோற்றத்தை அளித்திட சீருடைகளை தேர்ந்தெடுக்கும் வாய்ப்புகளை அளிக்கவுள்ளோம்." என்று அந்த அதிகாரி கூறியுள்ளார்.

சேலை, சுரிதார், குர்தியை..

சேலை, சுரிதார், குர்தியை..

உள்நாட்டு விமானத்தில் வேலை பார்க்கும் விமானப் பணியாளர் குழு சேலை அல்லது சுரிதார் குர்தியை தேர்ந்தெடுக்கலாம் என்று ஏர் இந்தியா கூறியுள்ளது. அதே போல் சர்வதேச விமானத்தில் வேலை பார்க்கும் விமானப் பணியாளர் குழு குர்தி அல்லது பேன்ட்டை தேர்ந்தெடுக்கலாம் என்றும் கூறியுள்ளது. இப்போதைக்கு சர்வதேச விமானத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு சுரிதார், குர்தி அணியும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

வாட் எ ஐடியா சார் ஜி...

வாட் எ ஐடியா சார் ஜி...

"காலத்தோடு ஏற்றவாறு மாறுவது வரவேற்கத்தக்க யோசனை தான். இருப்பினும் சேலை என்பது எப்போதுமே ஏர் இந்தியாவின் ஒரு அங்கமாகவே இருக்கும்.", என்று ஸ்விஃப்ட் ட்ராவெல் இண்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரான ரஜ்ஜி ராய் கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Kurtis, churidars and trousers: new clothes for Air India's airhostesses

Air India (AI) seems set to get a makeover of sorts. The ailing airline’s airhostesses could soon sport kurtis, churidars and trousers as the national carrier plans a more contemporary look for its cabin crew.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X