மும்பை: பல நிதி நெருக்கடியின் மத்தியில் சுமார் 3,100 கோடி ரூபாய் வெளிநாட்டுக் கடனை முழுமையாக சரியான நேரத்தில் செலுத்திவிட்டதாக ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
"அந்நிறுவனம் 500 மில்லியன் டாலர் அதாவது 3,100 கோடி ருபாய் பெறுமானமுள்ள வெளிநாட்டு வர்த்தகக் கடனை குறிப்பிட்ட கால கெடுவுக்குள் செலுத்தியுள்ளது" என ஆர்காம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் அந்நிறுவனத்தின் நிகர கடன் செப்டம்பர் கடந்த மாத இறுதியில் ரூபாய் 41,169 கோடியிலிருந்து 38,000 கோடியாக குறைந்தது.
நடப்பு 2013-14 ஆண்டில், ஆர்காம் (RCom) இதே போன்று 6,200 கோடி ருபாய் பெறுமானமுள்ள வேறு இரு கடன்களையும் ரூபாய் 1900 கோடி ருபாய் மதிப்புள்ள இருமுனை வெளிநாட்டு வர்த்தகக் கடன்களையும் முழுவதுமாக செலுத்தியது என ஒரு அறிக்கை தெரிவித்தது.
"இதன் மூலம் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் 23 வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் இருந்த கடன்களை முழுவதுமாக தீர்த்துள்ளது" என அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் மும்பை பங்கு சந்தையில் 0.53 சதவிகிதம் சரிந்து ரூபாய் 131.00 விலையில் மதியத்திற்கு பிந்தைய வர்த்தகத்தில் விற்கப்பட்டன.


Click it and Unblock the Notifications