இந்தியன் வங்கியில் வட்டி விகித மாற்றம்!! என்ஆர்ஐகளுக்கு அதிர்ஷ்டம்..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியன் வங்கியில் வட்டி விகித மாற்றம்!! என்ஆர்ஐகளுக்கு அதிர்ஷ்டம்..
மும்பை: வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் வைப்பு நிதிகளுக்கான வட்டியை உடனடியாக உயர்த்த உள்ளதாக இந்தியன் வங்கி அறிவித்துள்ளது.

ஒரு வருட காலத்திற்கும் மேல் இரண்டு வருட காலத்திற்குள் உள்ள இவ்வங்கி வைப்புகளுக்கு தரப்படும் 2.58 சதவிகித வட்டியில் மாற்றம் இல்லை.

 

அதேவேளையில் இரண்டு வருடத்திற்கு மேல் மூன்று வருடத்திற்குள் உள்ள வைப்புகளுக்கு வட்டியானது தற்போதுள்ள 2.39 சதவிகிதத்தில் இருந்து 2.50 சதவிகிதமாக உயர்ந்துள்ளது என அவ்வங்கி தெரிவித்துள்ளது.

மூன்று வருடத்திற்கு மேல் நான்கு வருடத்திற்குள் உள்ள வைப்புகளுக்கு தற்போதுள்ள 3.66 சதவிகித வட்டி 3.87% சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

நான்கு வருடத்திற்குமேல் ஐந்து வருடத்திற்குள் உள்ள வைப்புகளுக்கு வட்டி 4.06 சதவிகிதத்திலிருந்து 4.33 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஐந்து வருட வைப்பு நிதிகளுக்கான வட்டியானது 4.51 சதவிகிததிலிருந்து 4.80 சதவிகிதமாக உயர்ந்துள்ளதாக அவ்வங்கி அறிவித்துள்ளது.

பாதுகாப்பான முதலீட்டுக்கு வங்களின் வைப்பு நிதி மிகவும் ஏற்றது. வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் இத்தகைய நிதிகளில் முதலீடு செய்வதன் மூலம் அதிகபடியான லாபம் அடைய முடியும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Indian Bank revises interest rates

Indian Bank has revised interest rates in foreign currency non-resident (banking) deposits with immediate effect.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X