ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் அடுத்த குறி ஆடை வர்த்தகம்...

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: இந்தியாவின் மிகப்பெரிய ஈ-காமர்ஸ் (மின் வணிகம்) நிறுவனமான ஃப்ளிப்கார்ட், அமேசான் நிறுவனத்தை பின்பற்றி, விலை உயர்ந்த பொருட்களான பர்னிச்சர்கள் மற்றும் குளிர் சாதனப்பெட்டிகள் போன்றவற்றை விற்பதோடு மட்டுமல்லாமல் ஒரு படி மேலே சென்று தன் சொந்த பேஷன் பிராண்டை அறிமுகப்படுத்த உள்ளது.

 

தனிப்பட்ட அதன் சொந்த பேஷன் விற்பனையை உயர்த்த, ஏற்கனவே சந்தையில் இருக்கும் ஆடை நிறுவனங்களான ஜோவி மற்றும் எப் மீ போன்றவற்றை கையகப்படுத்த முற்படும் என்று எக்னாமிக் டைம்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.

நல்ல யோசனை..

நல்ல யோசனை..

"சொந்தமாக தனக்கென ஒரு புது வழியை வகுப்பதை விட, சிறந்த முறையில் நிறுவப்பட்டுள்ள குழு மற்றும் வல்லுனர்களை கொண்டுள்ள பிராண்டை வாங்குவதே சிறந்தது", என்று ஆலோசனை நிறுவனமான டெக்னோ பார்க்கின் தலைவர் அர்விந்த் சிங்க்ஹால் கூறியுள்ளதாகவும் எகனாமிக் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

குறைந்த விலை

குறைந்த விலை

இணையதள சில்லறை வணிகர்கள் தன் சொந்த பிராண்டின் பொருட்களை மிகவும் குறைந்த விளிம்பு விலையில் தான் வர்த்தகம் செய்கின்றனர், இதனால் மக்களிடம் இத்தகைய பொருடகளுக்கு வரவேற்பு அதிகம்.

வாடிக்கையாளரை கவர...
 

வாடிக்கையாளரை கவர...

பல இணையதள சில்லறை வணிகர்கள் வாடிக்கையாளரை கவர பிற பிராண்ட்களை குறைவான லாபத்திற்கு விற்று வருகின்றனர். மேலும் தன் சொந்த ப்ராண்ட் என்றால் ப்ராண்ட் மார்கெடிங் மற்றும் மேம்படுத்தும் செலவுகள் இருக்காது. மேலும் தன் சொந்த ப்ராண்ட் என்றால் ஆடைகளின் எண்ணிக்கை அடிப்படையில் அதிக அளவிலான இணங்கு தன்மை இருக்கும்.

ஆடை வணிகம்..

ஆடை வணிகம்..

ஒரு வருடத்திற்கு முன்பிலிருந்து ஆடைகள் வணிகத்தில் ஈடுபட ஆரம்பித்த ஃப்ளிப்கார்ட் நிறுவனம், மைந்தரா மற்றும் பிற இணையதள ஆடை விற்பனையாளர்களை போல் சிறந்து செயல்பட வேண்டும் என்று நினைத்தது. ஆனால் இப்போது தன் சொந்த பிராண்டை ஆரம்பித்து பிற நிறுவனங்களை விட சிறந்து செயல்பட முனைந்துள்ளது.

1 பில்லியன் டாலர் இலக்கு

1 பில்லியன் டாலர் இலக்கு

2015-ஆம் வருடத்திற்குள் தன் விற்பனையை $1 பில்லியனாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளதால், தன் சொந்த ப்ராண்ட் ஆடைகளை அறிமுகப்படுத்துவது சரியான தருணமாக இருக்கும்.

லாபம் அதிகம்..

லாபம் அதிகம்..

அதற்கு காரணம் சொந்த ப்ராண்ட் ஆடைகளின் விற்பனையில் 60 சதவீதத்திற்கு மேலான லாபத்தை அடையலாம். இதுவே எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனையில் 10 சதவீதத்திற்கு குறைவான லாபமே கிட்டும்.

பிற விற்பனை பொருட்கள்..

பிற விற்பனை பொருட்கள்..

ஃப்ளிப்கார்ட் நிறுவனம் ஏற்கனவே மடிக்கணினி, கைப்பேசி, கேமரா மற்றும் விளையாட்டு பொருட்களுக்கான உதிரிப் பாகங்களை தன் சொந்த பிராண்டில் விற்று வருகிறது.

குறுக்கு வழி...

குறுக்கு வழி...

இணையதளம் மூலமாக தனக்கென ஒரு பிராண்டை உருவாக்குவதற்கு நம்பகதன்மையை அமைத்து பிராண்டின் மீது உயர்வுள்ளல் ஏற்பட வேண்டும். இது பெரும் சவாலாக இருப்பதால், ஏற்கனவே அனைவராலும் அறியப்படும் ஒரு பிராண்டை கையகப்படுத்துவே சிறந்த வழியாகும்.

ஒன்றிணையும் நிறுவனங்கள்..

ஒன்றிணையும் நிறுவனங்கள்..

லாபத்தை அதிகரிக்க தனக்கென ஒரு பிராண்டை உருவாக்குவது என்பது இப்போது தொழிலில் ஒர் இயல்பாக மாறிவிட்டது. இது ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்களுக்கும் பொருந்தும். உதாரணத்திற்கு, சென்ற வருடம், முக்கியமான ஆடை நிறுவனமான இன்க்ஃப்ரூட் நிறுவனத்தை ஜோவி கையகப்படுத்தியது. அதே போல் ஷெர்சிங்க் என்ற நிறுவனத்தை 2012-ஆம் ஆண்டு மைந்தரா நிறுவனம் கையகப்படுத்தியது. வருங்காலத்தில் ஃப்ரீகல்ட்ர், பீஸ்டைலிஷ் மற்றும் ஃபேஷன் & யூ ஆகிய நிறுவனங்கள் ஒன்றாக சேர்ந்து ஒரே நிறுவனமாக செயல்படலாம்.

நூற்றில் சில...

நூற்றில் சில...

டன் பை நன் மற்றும் ஷாப் நைன்டீன் போன்ற நிறுவனங்களை சொந்த ப்ராண்டின் பொருட்களை கொண்டு இணையத்தளத்தில் வணிகம் செய்யும் நிறுவனங்களுக்கு உதாரணமாக கூறலாம். புகழ் மற்றும் மீண்டும் மீண்டும் வணிகம் செய்யும் வாடிக்கையாளர்கள் போன்றவைகள் இவ்வகை நிறுவனங்களுக்கு பெரிய பலமாக உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

After electronics, big daddy Flipkart is betting on fashion

India's largest e-commerce venture, Flipkart, is not only emulating Amazon by selling high-priced items like furniture and fridges but is also going one step further by launching its own fashion brand. 
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X