முடியல கண்ணு கட்டுது... அழுது புலம்பும் விஜய் மல்லையா...

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹைதராபாத்: நிதி நெருக்கடி, உழியர்களின் போராட்டம், வங்கி நிதி மறுப்பு என திரும்பிய பக்கம் எல்லாம் பிரச்சனை, இது தவிர நிறுவன சொத்துகளை வங்கிகள் கையகப்படுத்துதல் என பல சிக்கல்களில் சிக்கியுள்ள கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு மேலும் ஒரு அடி. விமான சேவையை மேம்படுத்த கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் பல நிறுவனங்களிடம் இருந்து விமானங்களை குத்தகைக்கு எடுத்தது தனது சேவையை நடத்தி வந்தது. குத்தகைக்கான பணத்தை செலுத்த தவறியதன் காரணமாக குத்தகை நிறுவனம் விமானங்களை கைப்பற்ற முடிவு செய்தது. இதற்கு சட்டத்திலும் இடம் உண்டு. இதனால் சரிவர இயங்காத கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் மேலும் பாதிக்கப்பட உள்ளது.

 

விமானங்களை குத்தகைக்கு விடும் உலகளாவிய நிறுவனமான ஏடபிள்யுஏஎஸ் (AWAS), கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு குத்தைக்கு விட்டுள்ள 14 விமானங்களை மீட்க்கும் பணியை தொடங்கி விட்டது.

நாட்டின் பல்வேறு விமான நிலையங்களில் இருக்கும் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் நிறுவன விமானங்களின் பதிவை நீக்கி விட்டது டைரக்டரேட் ஜெனரல் ஃஆப் சிவில் ஏவியேஷன். அதனால் குத்தைகை பணம் வந்து சேரவில்லை என்றால் விமானங்களை குத்தகைக்காரர்கள் மீட்டுக் கொள்ளலாம் என்று கடந்த வருடம் மார்ச் மாதம் அனுமதி கொடுக்கப்பட்டது.

முதற் கட்டமாக...

முதற் கட்டமாக...

AWAS நிறுவனம் மீட்புப் பணியின் முதல் வேலையாக, இவ்விமானங்களை பழுது பார்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த 14 விமானங்களை மீட்பதற்கு அனுமதி கோரி மத்திய வர்த்தக அமைச்சகத்தை அணுகியுள்ளது.

7 ஏர் பஸ் 320 விமானகள்

7 ஏர் பஸ் 320 விமானகள்

GMR ஹைதராபத் ஏவியேஷன் லிமிடெட் நிறுவனத்தில் பழுது பார்க்கப்பட்ட 7 ஏர் பஸ் 320 ரக விமானங்களும் இதில் அடக்கம்.

பண நெருக்கடி

பண நெருக்கடி

சென்ற வருடம், பண நெருக்கடியில் மாட்டிக் கொண்ட கிங்ஃ பிஷர் ஏர்லைன்ஸ், உலகத்தில் உள்ள பல்வேறு விமான குத்தகைகாரர்களிடம் இருந்து 60 புதிய விமானங்களை குத்தகைக்கு எடுத்துள்ளது.

குத்தகை நிறுவனங்கள்
 

குத்தகை நிறுவனங்கள்

இதில் AWAS, ஏவியேஷன் கேபிடல் க்ரூப், BOC ஏவியேஷன் மற்றும் ஏர்கேப் போன்ற குத்தகை நிறுவனங்களும் அடங்கும். தங்கள் விமானங்களை மீட்க ஒவ்வொரு குத்தைகார நிறுவனமும் அவரவர் வழியில் திட்டமிட்டு கொண்டிருக்கின்றனர்.

மீட்புப் பணி

மீட்புப் பணி

விமான மீட்பு வேலை SEZ-க்கு வெளியே தான் நடக்க வேண்டும் என்றும் விமானத்தில் பயன்படுத்தப்படும் உதிரிப்பாகங்களும் கருவிகளும் அனுப்பி வைக்கப்பட வேண்டும் என்றும் GMR ஹைதராபாத் ஏவியேஷன் SEZ நிறுவனத்தின் அங்கமான MAS GMR ஏரோ டெக்னிக் லிமிடெட், அனுமதி அளிக்கும் குழுவிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

முடிவு ஜனவரி 17-ஆம் தேதி தான்.

முடிவு ஜனவரி 17-ஆம் தேதி தான்.

ஜனவரி 17-ஆம் தேதி நடக்கவுள்ள அனுமத்தி குழவின் சந்திப்புக்கான நிகழ்ச்சி நிரலில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

AWAS starts recovery of Kingfisher Airlines aircraft

Global aircraft lessors AWAS has initiated the process to recover the 14 aircraft that it had leased to grounded carrier Kingfisher Airlines.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X